சிறுகதைகள் - 36

Open Imagination

சிறுகதைகள்

சொந்த வீடு - சிறுகதை
பிரேமா 28/03/2016
தீபாவின் மனம் தட தட என வேகமாக அடித்துக்கொண்டது. 'இனிமேல் உன் கூடவே தான் இருப்பேன் எங்கும் போக மாட்டேன்னு வசனமெல்லாம் பேசிவிட்டு அம்மா கூப்பிட்டவுடன் ஒரு வார்த்தை கூட எங்கிட்டே சொல்லாம அடுத்த நொடியே போய்விட்டார். இவரை எப்படி நம்புவது. அம்மாவும் பிள்ளையும் அப்படி என்ன தான் ரகசியம் பேசுவார்களோ என பல கேள்வியும் குழப்பமும் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது தீபாவின் மனசில்.............
Open Imagination

சிறுகதைகள்

தாத்தா கதைகள் - சாப்பாட்டு பக்கிரி
மல்லிகா 19/01/2016
தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் மற்றொருவனைப் பார்த்து,"போடா தண்டச் சோறு ""ஊரு சுத்தி " என்று திட்டிக்கொண்டு இருந்தான். இதைக் கேட்டா தாத்தா,"என்ன குழந்தை இப்படி எல்லாம் பேசுகிறாய் ?''.'யாரிடம் இருந்து கற்றுக்கொண்டாய் "என்று மெதுவாக கேட்டார். "தாத்தா,இவன் அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள்.இவன் ஊர்சுத்திக்கிட்டு இருக்கிறான்.இவனை எல்லோரும் இப்படித்தான் தண்டச் சோறு,ஊரு சுத்தி என்று அழைக்கிறார்கள் அது தான் "நானும் என்று இழுத்தான்...
Open Imagination

சிறுகதைகள்

பழமொழி சொல்லும் கதை - தாய் சொல் தட்டாதே
மல்லிகா 11/01/2016
ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது....
Open Imagination

சிறுகதைகள்

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்
மல்லிகா 01/01/2016
பழமொழிக் கதைகள்: வான் மதியும்,ரவியும் அண்ணன்,தங்கை, ரவி நான்காம் வகுப்பும் ,வான்மதி மூன்றாம் வகுப்பும் படித்துக்கொண்டு இருந்தார்கள்.இருவரும் சேர்ந்தே பள்ளிக்குச் செல்வார்கள். பள்ளி முடிந்த பின் தன தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவான் ரவி. இருவரின் அன்பைப் பார்த்த எல்லோரும் பாசப்பறவைகள் வாராங்கடா என் கிண்டல் செய்தவர்களும் உண்டு.அன்பை புரிந்து கொண்டவர்களும் உண்டு.எதுவும் பாதிக்காத வயது.குழந்தைப் பருவம் என்பதால் இரண்டையும் ஏற்றுக்கொண்டனர் இருவரும்...
Open Imagination

சிறுகதைகள்

தாத்தா கதைகள் - அத்தரி பாச்சா கொழுக்கட்டை
மல்லிகா 18/12/2015
“தாத்தா….தாத்தா இங்கே பாருங்கள். இவன் கடைக்கு போகவில்லை என்று இவனது அம்மா எப்படி அடித்து இருக்கிறார்கள் பாருங்கள் தாத்தா’ என்றனர்.’பாவம் இவன் முதுகு எல்லாம் வீங்கி கிடக்கிறது”என்றான் ஒரு சிறுவன். “அப்படியா…..நீ அம்மா சொன்னதை கேட்டிருக்கலாம் இல்லையா? கேட்டிருந்தால் இந்த அடி விழுந்திருக்காது அல்லவா?” என்று அன்புடன் வினவினார் தாத்தா...
Open Imagination

சிறுகதைகள்

அப்பளக்குடுமி தாத்தா கதைகள் மருமகனும் உரலும்
மல்லிகா 06/12/2015
அப்பளக்குடுமி தாத்தா அரசமரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி சிறுவர்,சிறுமிகள் வட்டமாக அமர்ந்து இருக்கிறார்கள்.தாத்தா எல்லோருக்கும் தான் கொண்டு வந்த கடலையைக் கொடுத்தார். எல்லோரும் வாங்கிக்கொள்கிறார்கள் .ஒரு சிறுவன் மட்டும் ‘வேண்டாம்’ என்கிறான்.தாத்தாவும் விட்டு விட்டார். தாத்தா கொடுக்கும்போது வேண்டாம் என்றவன்,சிந்திய ஒரு கடலையை எடுத்து சாப்பிட்டான்.இதைத் தாத்தா பார்த்தார்.”உடனே மருமகன் உரலை நக்கிய கதையாக இருக்கிறது “என்றார்.குழந்தைகள் எல்லாம் ‘அது என்ன தாத்தா’...
Open Imagination

சிறுகதைகள்

அப்பளக்குடுமி தாத்தா கதைகள் - தர்மம் தலை காக்கும்
மல்லிகா 12/11/2015
அப்பளக்குடுமி தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் வட்டமாக அமர்ந்திருந்தனர்.ஒரு பையன் எழுந்து ,’தாத்தா இன்று எங்கள் வீட்டிற்கு அறக்கட்டளை நிதி என்று சிலர் வந்து பணம் வாங்கிச் சென்றார்கள்.அறம் என்றால் என்ன தாத்தா?’என்று கேட்டான்....
Open Imagination

சிறுகதைகள்

அப்பளக்குடுமி தாத்தா கதைகள் - இருளும் பேயும்
மல்லிகா 08/11/2015
அப்பளக்குடுமி தாத்தா கம்பீரமாக அமர்ந்திருந்தார்.அவரைச் சுற்றி சிறுவர்கள்.அதில் ஒரு சிறுமி மிட்டாய் வைத்திருந்தாள் .அதை பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு சிறுமி பறித்து வாயில் போட்டுக்கொண்டாள். “மூதேவி,””மூதேவி’போடி உங்க வீட்டிற்கு ‘பேய் ‘வர,’பூதம் ‘ வர என திட்டிக்கொண்டு இருந்தாள் மிட்டாயை பறிகொடுத்த சிறுமி. சண்டை போட்ட குழந்தைகளைப் பார்த்து “இங்கே வாருங்கள்” என தாத்தா அழைத்தார்.இருவரும் ’உம்’ எனமுகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்....
Open Imagination

சிறுகதைகள்

மாடு திருடன்
மல்லிகா 28/09/2015
தமிழகத்தின் ஒரு சிறிய கிராமம் அது. ஆனால் வளம் கொழிக்கும் பூமி ஆகும்.செம்மண் ரோடுகள்,வளைந்து-நெளிந்து செல்லும் வண்டித்தடங்கள்.மின்சார வசதி கிடையாது.சிம்னி,அரிக்கன் விளக்குகள்.அந்த கிராமத்தில்ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினர்,அதிக எண்ணிக்கையிலும் விவசாய வேலைகள் செய்வதற்கு என்றும் ,கிராமத்திற்கு என்று பல்வேறு தொழில் செய்யக்கூடியவர்களும்வசித்து வந்தனர்...