‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் ‘


‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் ‘
--------------------------------------------ஒரு ஊரில் செல்வந்தர் செங்கோடன் இருந்தார். அவருக்கு ராமு, சோமு, காமு என்ற மூன்று மகன்கள் இருந்தார்கள்.

ராமுவிற்கு திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தான்.சோமு தந்தையின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டான்.

காமு வெளியூரில் படித்துக் கொண்டு இருந்தான்.

தந்தையின் செல்வத்தை ராமு சிறிது...சிறிதாக கரைப்பதிலே கவனமாக இருந்தான்.வேலைக்கு போகாமல் எத்தனை தீய பழக்கங்கள் இருக்கிறதோ அத்தனைக்கும் அடிமையாகி தன்னையும் கொஞ்சம்...கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருந்தான்.

காமு படிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான்.அதனால், படித்து முடித்த கையுடன் வேலையும் தேடி வந்தது.காமு நகர் புறத்திலேயே வசித்து வந்தான்.

இந்த சூழ்நிலையில் சோமுவிற்கு திருமணம் செய்ய எண்ணிய செங்கோடன் பெண் பார்த்து முடித்தார்.திருமண வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன.

பக்கத்து கிராமத்தில் தான் பெண் வீடு அங்கு தான் கல்யாணம்.தனியார் பேருந்து பிடித்து மாப்பிள்ளை வீட்டார்,மற்றும் உயரவினர்கள் எல்லாம் கிளம்பினார்கள்.

கேலியும் ,கிண்டலுமாக பயணம் செய்ததில் அலுப்புத் தெரியாமல் ஊர்வந்து சேர்ந்தார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் திருமண மண்டபம் களைகட்டியது.மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து முகூர்த்தம் வரை நல்லபடியாக முடிந்தது.

தனது மகனுக்கு தகுந்த குணவதியாக மருமகள் அமைந்ததில் செங்கோடனுக்கும்,அவர் மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
சின்னவனுக்கும் நல்லபடியாக பெண் அமைந்து விட்டால் கடமை முடிந்துவிடும் என அந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டனர்.

அவர்கள் எண்ணம் போல் சின்னவன் காமுவிற்கும் திருமணம் முடிந்தது.கடமைகள் எல்லாம் முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விடும் போது அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் நோயில் படுத்து விட்டார் செங்கோடன்.

ராமு,காமு இருவரும் தந்தையின் நிர்வாகத்திற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் ஒதுங்கிக் கொண்டார்கள். தொழிலில் வேறு பின்னடைவு ஏற்பட்டது.இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் சோமு தனி ஆளாக தவித்தான்.

சோமுவின் மனைவி திலகம்தான் தைரிய மூட்டினாள்.இறைவனின் பாத அடிகளை பற்றுவோம்.வரும் தூரங்கள் அனைத்தும் போகும் என தைரியம் கொடுக்கும் தன்னம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி உற்சாகம் கொடுத்தாள்.

திலகம் கொடுத்த அன்பான நம்பிக்கையினால் இறைவனின் பாதங்களில் பணிந்து தங்கள் கடமைகளை செய்தார்கள்.

ஆச்சரியமான அற்புதம் நடந்தது.படுத்த படுக்கையாக இருந்த தந்தை குணமாகி நிர்வாகத்தை கவனிக்க வந்துவிட்டார்.இரண்டு பேரும்சேர்ந்து கடுமையாக உழைத்ததன் விளைவு நஷ்டத்தை சரி செய்து இலாபம் கிடைக்கும் அளவிற்கு உற்பத்தி பெருகியது.

திலகம் கரங்களை பற்றிக்கொண்ட சோமு,’’ இறைவனடி உதவியது போல் அண்ணன் -தம்பி உதவ வில்லை ‘’ அதற்கு வழிகாட்டிய உனக்கு என வார்த்தைகளை முடிக்க முடியாமல் நா தழுதழுத்தது.

===========================================


Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து