'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்'

'அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்'
-------------------------

கூனியின் சூழ்ச்சியால் இராமாயணம் தோன்றியது .சகுனியின் சூழ்ச்சியால் மகாபாரதம் தோன்றியது.மங்குனியின் சூழ்ச்சியால் என்ன நேர்ந்தது என்பது தான் இக்கதை.


பசுபதி என்ற செல்வந்தர் இருந்தார். அவர் சொத்தை அபகரிக்க எண்ணிய மங்குனி தனது மகளான மங்கையுடன் சூழ்ச்சி செய்தார்.


பசுபதியின் ஒரே மகளான சங்கவி சகலகலைகளையும் கற்று தேர்ந்தவள்.தாய் இல்லாததால் தந்தைக்குப் பயந்து நடப்பவள்.


இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் மங்கை.


சங்கவி தந்தைக்கு தெரியாமல் செந்திலை காதலித்தாள்.மங்கை தோழி சங்கவிக்கு உதவுவது போல் நடித்தாள்.

சங்கவி அவளது தந்தைக்குத் தெரியாமல் செந்திலுடன் ஓடிப்போக வைத்தாள் மங்கை.


தனது செல்ல மகள் இவ்வாறு செய்தது அறிந்த பசுபதி துடித்துப் போனார், N'என்னிடம் சொல்லி இருந்தால் திருமணம் செய்து வைத்திருப்பேனே/.....


...ஓடிப்போய் என் மானத்தை ,கெளரவத்தை குலைத்து விட்டாளே ' என மனம் வேதனைப்பட்டார் பசுபதி.


 'இவ்விதம் செய்வாள் என நானும் எதிர்பார்க்கவில்லை.நடந்தவை எதுவும் எனக்குத் தெரியாது 'என கண்ணீர் விட்டாள் மங்கை.


 'ஓடிப்போனவளை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பதால் என்ன பயன் சாப்பிடுங்கள் அப்பா ' என சாப்பிட வைத்தாள் மங்கை.


 'நீ வைத்திருக்கும் பாசம் கூட பெற்ற பெண்ணுக்கு இல்லாமல் பொய் விட்டதே 'என மணம் வருந்தி தவித்தவர் ...
மங்கை காட்டிய அன்பை உண்மையென நம்பிவிட்டார் பசுபதி.


தனது மகள் மேல் உள்ள கோபம். மங்கை காட்டிய பாசம். சொத்தை எல்லாம் மங்கையின் பெயரில் எழுதி வைத்து விட்டார் பசுபதி.
சங்கவியின் செயலால் மனம் உடைந்த பசுபதி மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.


மங்குனியின் திட்டம் இவ்வளவு எளிதாக முடியும் என எதிர் பார்க்கவில்லை. சந்தோஷத்தின் எல்லையில் இருந்தனர் மங்குனியும்,மங்கையும்.
மங்கைக்கு தொழில் அதிபரை மணம் செய்ய பேசிமுடித்தார் மங்குனி.


விடிந்தால் திருமணம் மாலையில் தோட்டத்தில் தோழிகளுடன் நடந்து வந்து கொண்டு இருந்தாள் மங்கை.


ஏதோ கடித்தது தெரிந்தது.திரும்பிப் பார்த்தாள் மங்கை. நாகம் தீண்டி விட்டு போய்க்கொண்டு இருந்தது.


கண் நொடிக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தால் செய்வது அறியாது திகைத்தனர் தோழிகள் .
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி இறந்து விட்டாள் மங்கை.


கன்றைக் கொன்ற மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றார் மனுநீதிச் சோழன்.''அரசன் அன்று கொல்வான்'' என்பதற்கு ஏற்ப நீதி வழங்கினார் மன்னன்.
''தெய்வம் நின்று கொல்லும் ''என்பார்கள்.தான் செய்த பாவம் தன்னையே வந்து அடைந்தது.


தந்தையையும் மகளையும் பிரித்த பாவ அலைகள் பொங்கி பொங்கி ஓயவில்லை.அது சூழ்ந்த போது சூழ்ச்சி தேய்த்த மங்குனியின் செல்ல மகள் காலனின் கைகளில் ,கதறி அழுது யாது பயன்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து