ஆடி மாத சிறப்பு

ஆ+டி = ஆடி 

ஆடி..ஆடி. கமலபாதம் பற்றினேன் .ஐயனே அம்பலத்தில் ஆடுபவனே உன் திருபாதம் பற்றினேன்.ஆடி..ஆடி. கமலபாதம் பற்றினேன்

அடியவரை காக்கும் சிவனே.பெண்ணுக்கு சரி பாதி கொடுத்து அம்மை அப்பனாக காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரா /

அண்ணாமலையில் சோதி ரூபனாக காட்சி தந்த நீ உமையவளையும் அக்னியில் எரிய வைத்து, பிறக்க வைத்து சக்தி கொடுக்கும் சகலகலா வல்லியாக மீனாட்சி ,காமாட்சி, விசாலாட்சி,அபிராமி, அன்னபூரணி,பார்வதி, பர்வதவர்த்தினி ,மகேஸ்வரி, மல்லேஸ்வரி இப்படி பல பெயர்களில் பவனி வந்து மக்களுக்கு வேண்டும் நலன்கள் தருபவளுக்கு ......

ஆடி மாதம் என்றால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிறப்புடன் வெள்ளிக்கிழமை ஆடிக் கூழ் படைத்து ,மஞ்சள் கயிறு ,குங்குமம் ,வளையல் பிரசாதமாக பெண்களுக்கு வழங்கி.....

நல்ல நேரத்தில் பருவ வயது அடையவும்,கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் நல்ல வாரிசுகளைப் பெற்று சுமங்கலியாக வாழவும் அம்மன் அருள் வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாள் பாதம் பற்ற துன்பங்கள் விலகி நன்மைகள் பெருகும்.


துன்ப காலத்தில் சிவனே.../என இருக்கச் சொல்வதும் அதனால் தான் ..சிவன் பெயரை சிந்தையில் நிறுத்தி சக்தி உருவமான பராசக்தியை ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் தேடிவரும் நன்மைகள்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் அம்மாவாசையும் வருவதால் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து விரதம் இருந்து மூதாதையர்கள் ஆசியும் பெற்று அம்மன் அருளையும் பெறுவோம்.

அதோடு இந்த மாதத்தில் தான் மழை அதிகம் பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருக்கும். எனவே உணவு பஞ்சம் நீங்க 'ஆடிப்பட்டம் தேடி விதை ' என்ற முதுமொழிக்கு விவசாய பெருமக்கள் உயிர் கொடுத்து உணவு தானியங்கள் உற்பத்திக்கு வித்திடும் மாதமும் இந்த மாதமே .எனவே ஆடி மாதம் அனைத்து உயிர்களையும் காக்கும் மாதமாக உள்ளதால்,காக்கும் அன்னையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் கொழிக்கட்டும்.

Share this Post:

எழுதியவர் மீனாட்சி

உங்களுடைய கருத்து