இயற்கை தரும் செல்வம் மழைஇயற்கை தரும் செல்வம் மழை
------------------------------------------------மனித வாழ்விற்கு மிகவும் அவசியமானது சுத்தமான காற்று, சுத்தமான நீர்.இவை அடிப்படையிலே மற்றவைகள் உற்பத்தியாகின்றன 

.உலகில் மக்கள் உள்பட உயிரினங்கள் வாழ்வதற்கு நீர் அத்தியாவசிய தேவை.இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களாக இருப்பவை பருவ மழைதான். 

இதில் இந்தியாவில் முதன்மையானது வடகிழக்கு பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் தான். திடீர் ஜாக்பாட்டாக எப்போதாவது புயல் நிலவரங்களால் மழை பொழிவும், சேதமும் அதிகம் ஏற்படுவதும் உண்டு.


இந்த ஆண்டு , தென் மேற்கு பருவமழை திருப்திகரமாக இருக்கும் என்றுதனியார் வானிலை மையமும், இந்திய வானிலை மையமும் அறிவிப்பு செய்துள்ளன. ஆனாலும் வழக்கத்தை விட சிறிது குறைவாக இந்த மழை இருக்கும் என்றும் இதனால் பாதிப்புகள் இருக்காது என்றும் அறிவித்துள்ளன.


இந்த நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், நீர் ஆதாரங்களை காக்கவும் மாதிரி வரைவுச் சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, மக்களின் பார்வைக்கும் ஆலோசனைக்கும் வைத்திருக்கிறது..பாசன வாய்க்கால்கள், தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றுக்கு அரசுகள் அதிகம் செலவிடாததால், அவற்றை சேமிக்க முடியாமல் உள்ளது.தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் கிணறுகள், 40 லட்சம் ஆழ்துளைகள் உள்ளன. ஆனால் இதில் 60 சதவீதம் வறண்டுபோய் உள்ளன


இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி.குறிப்பாக தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும் .இயற்கை நமக்கு தரும் மிகப்பெரிய செல்வம் மழை தான்.இந்த மழைசெல்வத்தை நாம் சேமிக்க வேண்டும்.வீணாக கடலில் ஓடிக் கலக்க விடக்கூடாது.அதை நம் தேவைகளுக்குப் பயனுள்ள வகையில் நிலை நிறுத்த வேண்டும். 

இந்த நிலையில் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது.மக்கள் தண்ணீரில் பல துன்பங்களை ஏற்கனவே அனுபவித்து உள்ளனர். எனவே அவற்றுக்கு நல்ல மாற்று ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அந்த மக்களின் ஆசையை நிறைவேற்ற முதல் கடமையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். 


எப்போதாவது பெய்யும் மழை நீரை சேமிக்க, அதை நல்ல முறையில் பயன்படுத்த சிறந்த திட்டங்களை புதிய அரசு தனது முதன்மை இலக்காக கொண்டு செயல்படுத்தவேண்டும். உணவு உற்பத்தி பெருக நீர் நிலைகள் பெருகவேண்டும்.இருக்கும் நீர் நிலைகளை தூர் எடுத்து பாதுகாப்பது, புதிய நீர்தேக்கங்களை உருவாக்குவது என்பதை மனதில் கொண்டு செயல்பட்டு அதில் வெற்றி பெற வேண்டும்.


நகர்ப்புறங்களில் தொழிலகங்களும் வீடுகளும் தண்ணீரை வீணாக்காமலும் மாசுபடுத்தாமலும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பயன்படும் தண்ணீரை அளக்க மீட்டர்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.


நம்மிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருந்தால் என்ன செய்கிறோம்.பின்னர் நமக்கு தேவைப்படும் என்ற எண்ணத்தில் அதை பத்திரமாக ஏதாவது வகையில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். அதை சேமிக்க ஆலோசனை செய்து அல்லது கேட்டு செயல்படுகிறோம்.


அதே போல் நமது தேவைக்கு அதிகமாக கிடைக்கும், வரும் தண்ணீரை பத்திரப்படுத்தி வைக்க நம்மால் முடியும் அதற்கான முயற்சிகளில் அறிஞர்களின் உதவியோடு திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும். 


சிறந்த சிந்தனையாளர்கள்,பொறியாளர்கள் நம்மிடம் உள்ளனர்.அவர்களை அரசு பயன்படுத்தி வருங்காலத்தில் தண்ணீர் வீணாவதையும், பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுப்பதன் மூலம் நம் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ,முன்னோடியாக இருக்கவேண்டும்.


அதன் மூலம் நாடு நிச்சயம் உணவு,சுகாதாரம் போன்ற வற்றில் குறிப்பாக தமிழ்நாடு ஒரு சிறந்த முன்மாதிரி நாடாக மற்றவர்கள் போற்றுகின்ற நாடாக திகழும் என்பதில் ஐயமில்லை,
=============================

Share this Post:

எழுதியவர் சந்திரன்

உங்களுடைய கருத்து