கிருஷ்ணரின் கீதை

.கிருஷ்ணரின் கீதை

அர்ஜுன உபதேச யோகம் -தொடர்ச்சி
---------------------------
அர்ஜுனன்.மேலும் கூறினான்,ஆட்சி பீடத்தின் பேராசையால் போர் புரிய முனைந்துள்ளனர்.நாமே அரசு ஆசையைத் துறந்து போரிலிருந்து விலகுவோமானால் அவர்கள் யாரையும் கொல்ல எக்காரணமும் இருக்க முடியாது.ஒருக்கால் அவர்களில் யாராவது என்னைக் கொல்ல விரும்பி கொல்ல வந்தால் நான் அவர்களை கொல்ல மாட்டேன் என்றான் அர்ஜுனன் .

கெடுதி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு எதிரே வரும் ஆததாயியை ஆலோசியாமல் கொன்று விட வேண்டும் .ஆததாயியைக் கொல்வதால் கொல்பவருக்கு ஒரு குற்றமும் ஏற்படாது.

1.தீ வைப்பவன் ,
2.நஞ்சு கொடுப்பவன் ,
3.ஆயுதமெடுத்துக் கொல்ல வருபவன்.,
4.செல்வத்தைப் பறித்துக் கொள்பவன் ,
5.நிலத்தைப் பறித்துக் கொள்பவன் ,
6.மனைவியைப் பறிப்பவன்.
    இந்த ஆறு தீய குணங்கள் உடையவரே ஆததாயி எனப்படுபவர்.
 இந்த ஆறு தீய குணங்களும் துரியோதனனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்தது.

1.அரக்க மாளிகையில் நெருப்பு வைத்துப் பாண்டவர்களை உயிரோடு கொளுத்த முயன்றார்கள்,
2.பீமசேனனின் உணவில் நஞ்சைக் கலந்தார்கள்.
3.கையில் ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயாராக இருக்கிறார்கள்.
4..சூதாட்டத்தில் வஞ்சனை செய்து பாண்டவர்களின் அணைத்துச் செல்வத்தையும்,
5 .முழு ராஜ்யத்தையும் பறித்துக் கொண்டார்கள்.
6.திரெளபதியை சபையில் இழுத்து வந்து பெரும் அவமானத்தை செய்தார்கள் ஜயதிரதன் திரெளபதியை அபகரித்துக் கொண்டு போனான்.

மேலே சொல்லப்பட்ட அத்தனை குற்றங்களையும் செய்துள்ள படுபாவிகள் தான் .அவர்களை கொல்வது பாவம் இல்லை தான்.ஆனால் எவன் தன் குலத்தை அழிக்கிறானோ, அவன் எல்லோரைக் காட்டிலும் மிக மிகக் கொடிய பாவி என்கிறது.

எனவே, திருதிராஷ்டிரர் புதல்வர்கள் படுபாவிகள் தான். ஆனாலும் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .எனவே இவர்களை கொல்வது பாவம் தான். இலாபம் இல்லை .எனவே இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை என மறுக்கிறான் அர்ஜுனன்.

இதைக் கேட்ட கிருஷ்ணன் குலநாசம் இருவருக்கும் பொது தானே. அவர்கள் யுத்தத்திலிருந்து விலகாமல் இருக்கும் போது உனக்கு மட்டும் ஏன் இந்தக் கவலை என வினவினார்.

ஜனார்த்தனா, பேராசையால் மதியிழந்த இவர்கள் குலநாசத்தினால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் பார்ப்பதில்லை.நாம் நன்கு உணர்கின்றவர்கள் ,இந்தப் பாவச் செயலில் இருந்து விலகுவது பற்றி ஏன் யோசிக்க கூடாது என்கிறான் அர்ஜுனன்.1.தீ வைப்பவன் ,
2.நஞ்சு கொடுப்பவன் ,
3.ஆயுதமெடுத்துக் கொல்ல வருபவன்.,
4.செல்வத்தைப் பறித்துக் கொள்பவன் ,
5.நிலத்தைப் பறித்துக் கொள்பவன் ,
6.மனைவியைப் பறிப்பவன்.
    இந்த ஆறு தீய குணங்கள் உடையவரே ஆததாயி எனப்படுபவர்.
 இந்த ஆறு தீய குணங்களும் துரியோதனனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்தது
மேலும், குலநாசத்தினால் தொன்று தொட்டு வருகின்ற குல தர்மங்கள் அழிந்து விடுகின்றன.தர்மம் அழிந்த பிறகு குலம் முழுவதிலும் அதர்மமும்,வெகுவாகப் பரவிவிடும் என கவலைப் படுகிறான் அர்ஜுனன்.

கடவுளிடம் உள்ள பயம்,சாஸ்திர கட்டுப்பாடு,குலப் பழக்கம் ,அரசாங்க சட்டம்,உடலுக்கும்,பொருளுக்கும் ஏற்படும் அழிவின் பயம் இல்லை என்றால் கடிவாளம் இல்லாத குதிரைகள் போலத் தத்தம் விருப்பப்படி போக ஆரம்பித்து விடுவார்கள்.

எந்த சமுதாயத்தில் இப்படி தறி கெட்ட தன்மை முளைக்கிறதோ அந்த சமுதாயத்தில் பாவம் பரவிவிடும் என விளக்கி கூறுகிறான் அர்ஜுனன்.

கிருஷ்ணா ,என அழைத்த அர்ஜுனன் மேலும் கூறுகிறான்.அதர்மம் அதிகமாகப் பெருகுவதால் குலப் பெண்கள் நடத்தைக் கெட்டுப் போவார்கள்.குழந்தைகளும் புனிதத் தன்மையை கைவிட்டு எளிதில் குலநாசம் செய்வார்கள் என்கிறான் ,அர்ஜுனன்.

யுத்த முயற்சி என்ற தம் செயல் பற்றிய வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறான்.தர்மாத்மாக்கள் என்றும், அறிவுடையோர் என்றும் கருதப்படும் நாம் கூட இத்தகைய பாவச் செயலில் முனைவது எவ்விதத்திலும் நியாயமாகாது.

நாமே, இத்தகைய பாவத்தைச் செய்ய நிச்சயித்துவிட்டோம்.என்ன ஆச்சர்யம், என்ன கஷ்டம் என்று அர்ஜுனன் கூறினான்.

மேலும் கூறுகிறான்,இப்படிப் போர் முழக்கம் செய்தபிறகு கூட, நான் ஆயுதங்களை தியாகம் செய்து விடுவேன்.

அவர்களின் எந்தச் செயலுக்கு எதிராக நான் எதுவும் செய்ய மாட்டேன் அப்போது அவர்கள் அநேகமாக யுத்தம் செய்யாமல் இருக்கலாம்.

அதனால் நம்மவர்களுக்கெல்லாம் காப்பு ஏற்படலாம்.அவர்கள் இவ்வாறு செய்யாமல் நான் ஆயுதமில்லாமல் யுத்தத்திலிருந்து விலகி இருப்பதை அறிந்து என்னைக் கொன்றாலும்,அந்த மரணம் கூட எனக்கு நலனை அளிக்கும்.

ஏன்? என்றால் ,குலத்தை அழிக்கிற கொடிய பாவத்திலிருந்து நான் மீண்டுவிடுவேன்.அடுத்ததாக நம்முடைய உறவினர்கள் சம்பந்திகள்,எல்லோரும் காப்பாற்றப்படுவார்கள்.குலத்தை காப்பாற்றிய புண்ணியமும் கிடைக்கும் என்ற அர்ஜுனன் ,கலங்கிய மனதுடன் அம்புகளுடன் வில்லையும் எறிந்து விட்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான், என்றான் சஞ்ஜயன்.

சாரமானா தத்வங்கள் நிறைந்த இந்த சம்பவங்கள் ‘உபநிசத்' ஆகும்.கர்மபலன்கள் சொல்லப்படுவதால் ‘கர்மயோகம்’;என யோகத்தில் கூறப்படுகிறது.பரம் பொருளான கிருஷ்ணனும், பக்தனான அர்ஜுனனும் உரையாடிய சம்பவம் என்பதால் ஜுவாத்மா பரமாத்மாவிடம் சேர்க்கின்ற வழி ‘யோகம்' என அழைக்கப்படுகிறது.முதல் உரையாடலாகிய ‘’அர்ஜுன உபதேச யோகம்'’ நிறைவு பெறுகிறது.

               முதல் அத்தியாயம் நிறைவுற்றது -கீதை தொடரும்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து