கிருஷ்ணரின் கீதை -அர்ஜுன உபதேச யோகம் -தொடர்ச்சி

கிருஷ்ணரின் கீதை -அர்ஜுன உபதேச யோகம் -தொடர்ச்சி
‘யுத்ததிற்காகக் கூடியிருக்கும் இந்த கெளரவர்களைப் பார் என்று கிருஷ்ணன் கூறியதற்கு காரணம் இருக்கிறதா ?’ (போல்ட்)

‘’ஆமாம்’’ என்ற சஞ்ஜயன் விவரிக்க ஆரம்பிக்கிறான் .

‘அர்ஜுனா ,நீ சொன்னபடியே இங்கிருந்து எல்லோரையும் நன்றாகப் பார்க்க முடியுமோ, அந்த இடத்தில் கொண்டு வந்து நான் ரதத்தை நிறுத்திவிட்டேன் .

ரதம் அசையாமல் நிற்கும்.எவ்வளவு நேரம் பார்க்க வேண்டுமோ, அவ்வளவு நேரம் நீ நன்றாகப் பார்.

கெளரவர்களைப் பார் ,எல்லோரும் உன்னுடைய உறவினர்கள் நன்கு பார்த்துக் கொள் , என்று சொல்லிய கிருஷ்ணன் அர்ஜுனனுடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் பாசத்தை எழுப்பி விடுகிறார்..

அர்ஜுனன் பந்த பாசத்தை நினைத்துத் தமது பலவீனத்தைக் கருணையுடன் வெளிப்படுத்துவதற்கு இந்தச் சொல் வித்துப் போல் ஆகிவிட்டது.

அர்ஜுனனை நிமித்தமாக வைத்துக் கொண்டு உலக நன்மைக்காகவே கிருஷ்ணன், தாமே இந்தச் சொற்களால் அர்ஜுனனுடைய உள்ளத்தில் இப்படி ஓர் எண்ணத்தை உண்டு பண்ணி யுத்தம் செய்ய மறுக்கும்படி செய்கிறார்.

அதன் விளைச்சலாக கிருஷ்ணனின் முகத்தாமரையில் இருந்து மூவுலகையும் புனிதமாக்கும் திவ்வியமான ‘’கீதை'’என்ற அமுதத்தின் இனிய பெருக்கு வெளிப்பட்டது.

எல்லையில்லாக் காலம் வரை கீதை மக்களுக்குக் கணக்கில்லா பரம மங்களத்தைக் கொடுக்கப்போகிறது என்ற சஞ்ஜயன்,...

கிருஷ்ணனுடைய ஆணையைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான் என விளக்குகிறான் .

   குந்தியின் குமாரனான அர்ஜுனன் அங்கு இரண்டு படைகளிலேயும் நிற்கின்ற பெரியப்பா,சிற்றப்பாக்களையும் ,தாத்தா ,முப்பாட்டானார்களையும் ,குருநாதர்களையும்,பேரன்களையும் ,மற்றும் நண்பர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் பார்த்தான்.

கூடியிருந்த அந்த அனைத்து உறவினர்களையும் நன்கு பார்த்த அர்ஜுனன் மிகுந்த கருணையோடு இரக்கத்தோடு கூடியவனாக வருத்தம் கொண்டான்.

மிகுந்த கருணையோடு என்று கூற காரணம் இருக்கிறதா? என கேட்டார் திருதிராஷ்டிரர். (போல்ட்)

“ஆமாம்" என்ற சஞ்ஜயன் விளக்க ஆரம்பித்தான். நாற்புறமும் சூழ்ந்திருந்த உறவினர்களைப் பார்த்தான், அர்ஜுனன்.

‘’இவர்கள் எல்லோருக்கும் இந்தப் போரில் மரணம் ஏற்படுமே என நினைத்தான்,உறவினர்களின் மீது வைத்திருந்த பற்றால் உடல் நடுங்கியது.

உள்ளத்தில் போருக்கு எதிராக ஒரு விதமான கருணையோடு கூடிய கோழைத்தனம் ,மிகவும் பலமாக எழுந்தது.இதைத்தான் ‘’மிகுந்த கருணை’’ என்றேன்.

இந்த கோழைத்தனம் மேலிட்டதால் அர்ஜுனன் அரசனுக்குரிய வீர சுபாவத்தை மறந்து,மிகுந்த குழப்பத்தை அடைந்தான்.

கெளரவர்களைப் பார் ,எல்லோரும் உன்னுடைய உறவினர்கள் நன்கு பார்த்துக் கொள் , என்று சொல்லிய கிருஷ்ணன் அர்ஜுனனுடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் பாசத்தை எழுப்பி விடுகிறார்..

அர்ஜுனன் பந்த பாசத்தை நினைத்துத் தமது பலவீனத்தைக் கருணையுடன் வெளிப்படுத்துவதற்கு இந்தச் சொல் வித்துப் போல் ஆகிவிட்டது.

கிருஷ்ணனை நோக்கி , கிருஷ்ணா, போர்க்களத்தில் ஒன்றாக கூடி நின்று போர் புரிய விரும்புகின்ற இந்த உறவினரின் கூட்டத்தைப் பார்த்து என் அங்கங்கள் சோர்வடைகின்றன.

வாயும் உலர்கிறது.உடல் நடுங்குகிறது உள்ளத்தில் பயங்கரமான தாபமும்,பயமும் ,வேதனையும் ஏற்படுகிறது.கையிலிருந்த காண்டீவ வில் நழுவிக் கொண்டிருக்கிறது. மேலும் சருமத்திலும் மிகுந்த எரிச்சல் உண்டாகிறது.என் மனமும் குழப்பமாக உள்ளது.எனவே ,நிற்பதற்குக் கூட முடியாதவனாக இருக்கிறேன் என்றான் அர்ஜுனன்.

அர்ஜுனனுடைய காண்டீபம் எத்தகையது ? அது அவருக்கு எப்படிக் கிடைத்தது ,என விளக்கும்படி கேட்டார் திருதிராஷ்டிரர். (போல்ட்)

அர்ஜுனனுடைய காண்டீபம் தெய்வீகமானது.அதன் உயரம் பனை மரத்தளவுள்ளது.காண்டீபம் உலகப் புகழ் பெற்ற வில். இதற்கு தங்கக் கவசம் உண்டு.எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் சிறந்தது.

இலட்சம் ஆயுதங்களுக்கு சமமான சக்தி உடையது. இந்த வில்லின் உதவியால்தான் அர்ஜுனன் விண்ணவரையும் ,மன்னவரையும் வென்றார்.
காண்டீபம் விசித்திரமானது . பல வர்ணங்கள் கொண்டது.மிருதுவானது .தேவர்களும் ,கந்தர்வர்களும் பூஜித்து வந்திருக்கிறார்கள்.

தெய்வீகமான காண்டீவ வில்லை பிரம்மதேவர் ஆயிரம் ஆண்டுகளும் ,பிரஜாபதி ஐநூற்று மூன்று ஆண்டுகளும் இந்திரன் எண்பத்தைந்து ஆண்டுகளும்,சந்திரன் ஐநூறு ஆண்டுகளும் ,வருணதேவன் நூறு ஆண்டுகளும் வைத்திருந்த பெருமை பெற்றது காண்டீபம்.

அர்ஜுனன், காண்டீப வனத்தை எரித்து அக்னி தேவருக்கு சமர்ப்பித்த போது , அக்னி பகவான் மகிழ்ந்து வருணன் மூலம் அர்ஜுனனுக்கு இந்த வில்லைக் கொடுத்தார் என விளக்கினார் சஞ்ஜயன்.

அப்படிப்பட்ட காண்டீவ வில் இருந்தும் போர் புரிய அர்ஜுனன் தயங்கக் காரணம் என்ன என திருதிராஷ்டிரர் கேட்டார். (போல்ட் )

நம் கூடப் பிறந்தவர்களையும் உறவினர்களையும் போரில் கொள்வதால் எந்தவிதமான நன்மையையும் உண்டாகாது .உறவினர் இல்லையே என்ற துயரம் வாழ்க்கை முழுவதும் தொடரும்.

அவர்களைக் கொள்வதால் இவ்வுலகில் நன்மையில்லை.பரலோகத்திலும் நன்மையில்லை.ஆகவே ,போர் செய்வதில் அர்த்தமில்லை என அர்ஜுனன் நினைத்தான்.

அதனால் ,கிருஷ்ணா, நம்முடைய உறவினர்களைக் கொன்ற பிறகு கிடைக்கும் வெற்றியோ ராஜ்யமோ , சுகமோ எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை.இவர்களைக் கொன்றால் நமக்கு இவ்வுலகியல் இன்பமாகிய ராஜ்ஜியம் அதனால் கிடைக்கும் சுகபோகங்களிலும் என்ன இருக்கிறது.,வாழ்வது கூட இலாபமில்லை என கூறினான் அர்ஜுனன்.

மேலும் கூறினான்,ஆட்சி பீடத்தின் பேராசையால் போர் புரிய முனைந்துள்ளனர்.நாமே அரசு ஆசையைத் துறந்து போரிலிருந்து விலகுவோமானால் அவர்கள் யாரையும் கொல்ல எக்காரணமும் இருக்க முடியாது.ஒருக்கால் அவர்களில் யாராவது என்னைக் கொல்ல விரும்பி கொல்ல வந்தால் நான் அவர்களை கொல்ல மாட்டேன் என்றான் அர்ஜுனன் .  

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து