குறள் சுவை அறிவோம் -3. நீத்தார் பெருமை

குறள் சுவை அறிவோம்
---------------------------------------

3. நீத்தார் பெருமை
-----------------------------------
21.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஒழுக்கத்தில் உறுதியாக இருந்து,ஆசைகளை துறந்தவர் துணிவை அறிவு சார்ந்த நூலில் தெரிந்து கொள்ளலாம்.

22.துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று .

ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை விவரித்துச் சொல்வது பூமியில் பிறந்து இறந்தவர்களைக் கணக்கிடுவதற்கு ஒப்பானது.


23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

இம்மை மறுமைகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்த பின் துறவறத்தை மேற்கொண்டவரின் பெருமை உலகத்தில் உயர்ந்ததாகும்..

24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

மனம் என்னும் அங்குசத்தை அடக்கி காப்பவன் ,மனம் என்னும் சேமநிதியை விதைத்தவன் ஆவான்.

25.ஐந்துவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐம்புலன்களையும் அடக்கியவன் ஆற்றலுக்கு, விரிந்த வானத்தில் இருக்கும் தலைவன் இந்திரனே போதிய சான்றாகிறான்.


26.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்பவரே பெரியவர்.அப்படிச் செய்ய முடியாது சாதாரணமாக வாழ்பவர் சிறியவர்.

27.சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

சுவை, வெளிச்சம், துன்பம், புகழ், நாற்றம் இந்த ஐந்து தன்மைகளையும் அறியவல்லவனின் அறிவில் உள்ளது உலகம்..

28.நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் .

வாக்கு தவறாத சொல்லுடையவர் பெருமையை இந்த நிலத்தில் வாழும் மக்களுக்கு அவர் பேசும் மந்திரமான சொல்லே காட்டிவிடும்.


29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது .

மேன்மையான குணங்கள் உடைய பெரியவர்கள், மலையில் இருக்கும் தவசீலர்களின் கோபம் கண்ணிமைக்கும் பொழுது என்றாலும் அதனின்று தப்புவது மிகவும் கடினம்.

30.அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக வான்.

அனைத்து உயிர்களிடமும் அன்பு கொண்டு இரக்கத்தோடு கவசம் போல் காக்கும் தரும சீலர்களை கடவுள் என்றும்,அந்தணர் என்றும், பெரியோர் என்றும் கூறலாம்.
=======================

Share this Post:

எழுதியவர்

உங்களுடைய கருத்து