குறள் சுவை அறிவோம் -4.அறன் வலியுறுத்தல்

குறள் சுவை அறிவோம்

4.அறன் வலியுறுத்தல் 

31.சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூ உங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு .

தருமம் புகழையும் செல்வத்தையும் குலை விடுதல் போல் தரும்.தர்மம் செய்யவில்லை என்றால் புகழும் மங்கும்., செல்வமும் மெலியும் .எனவே தருமத்தை விட மேலான செல்வம் உயிர்களுக்கு என்ன இருக்கிறது.

32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

தருமம் செய்ய வில்லை என்றால் உயர்வு என்பது இல்லை .தருமத்தை மறப்பதை விட கேடு தருவது வேறு எதுவும் இல்லை.

33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

தர்மம் ஆற்றும் குணம் நன்மை செய்யும் என்பதை அறிந்து தொடர்ந்து செல்லும் இடம் எல்லாம் உண்மையாக செய்ய வேண்டும்.


  • 34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
  • ஆகுல நீர பிற .

மனதாகிய தன் குற்றம் இல்லாமல் இருக்கவேண்டும்.அதுவே ,முழுமையான அறம்.பிற அரண்கள் அனைத்தும் கள்ளத்தனம் மண்டிக்கிடக்க , நீரின் மேல் போடும் உப்பு போல் கரைந்து விடும்.

35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் .

பொறாமை, வெறுப்பு, பேராசை,கடுஞ்சொல், இவை நான்கும் இழுக்கு தரக்கூடிய குற்றம் ஆகும்.இவைகளை அகற்றி நல்வழியில் நடத்தலும் அறம்தான்.

36.அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை .

முற்பிறப்பில் செய்ததை ,வாழ்ந்ததை அறியாமல் அறம் செய்தால் இறக்கும் காலத்தில் இறைவன் முதல் துணையாக இருப்பான்.

37.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை .

தர்மம் செய்யும் போது எடை முட்கோல் போல் இடையில் இருப்பதால் பல்லக்கு தூக்குப்பவரிடமும்,ஏறிச்செல்வோரிடமும் சொல்ல வேண்டாம்.

38.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ.'.தொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

காலத்தில் விழுது படர்வது அழகு. காலத்தில் நல்ல செயல்கள் ஆற்றுபவனுக்கு மதகு அடைக்கும் கல் போல் பிறவி விலகும்.

39.அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல .

தரும காரியங்கள் செய்து அதனால் பிறருக்கு வரும் மகிழ்ச்சியே இன்பம் தரக்கூடியது.அது அல்லாது பெருமைக்காக செய்யும் செயல்கள் புகழ்கள் விரைவில் மறைந்து விடும்.

40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பலி.

பல செயல்கள் செய்தாலும் நற்குணம் ஒன்றே அவனை காக்கும்.எனவே, தர்மகாரியம் செய்து மேன்மை அடைய வேண்டும்.கீழான குணங்களை தவிர்த்துப் பழிவராமல் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
=============================================

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து