குறள் சுவை அறிவோம் 5.இல்வாழ்க்கை

குறள் சுவை அறிவோம்

5.இல்வாழ்க்கை 

41.இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை .

இல்லறத்தில் வாழ்பவர்கள் தகுதி உடைய மூவர் இல்லத்து மூத்தவர்களை ,மகளீர்களை மதித்தும் , வாழ்க்கை துணைவியுடன் மக்களுக்கு உதவி வாழவேண்டும்.

42.துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை .

துறவறம் பூண்ட சந்நியாசிகள், வலிமை அற்ற நோயாளிகளுக்கு உதவுதல், குடும்பத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தல் ,இவைகளை இல்லத்து துணையுடன் செய்து வாழ வேண்டும்.

  • 43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
  • ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்பகுதியில் வாழும் மக்கள் ஐம்புல அடக்கத்தில் தெய்வவழி பாட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.தீயவற்றில் இருந்து விலகி விடுகிறார்கள்., அனைவரையும் உபசரித்து அன்பு காட்டுவதால் பிறவி துன்பம் வராமல் காத்துக் கொள்கிறார்கள்.எனவே,அவர்கள் வாழ்வு சிறப்புடையதாகிறது.


44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

வசை சொல்லுக்கு அஞ்சி தன் துணையுடன் மட்டுமே வாழும் இல்லத்தான் வழிதவறி எந்தக் காலத்திலும் நடக்க மாட்டான்.

45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது .

குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்து பிறருக்கு கொடுத்து நெகிழ்ந்து வாழும் குணமே இந்த பூமியில் நாம் பிறந்ததன் பலனாகும் .

 46.அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்.


இல்லற வாழ்க்கையை தர்ம காரியங்களில் ஆற்றி வாழ்பவர்களுக்கு வெளியில் போய் பெறுவதற்கு என்ன இருக்கிறது.

47.இயல்பினான்இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

ஒழுக்கமும் ,நற்குணமும் கொண்டு இல்லறத்தில் வாழ்பவர்கள் இதுபோல் வாழவேண்டும் என முயல்பவர்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பார்கள்.

48.ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து .

மனதில் குற்றமில்லாமல் ஆற்றவேண்டிய தர்ம கடமைகளை செய்து வாழுபவரை ,தவம் செய்து பெருமை கொண்டவர் நெகிழ்ந்து வாழ்த்துவர்.

49.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ.'.தும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று .

இல்லத்தில் வாழ்பவர்கள் அறம் செய்வதே இல்லறத்து தர்மம்.அப்படிப்பட்ட இல்லற வாழ்க்கையை பிறர் பழித்துப் பேசாது வாழ்தல் சிறப்பாகும்.

50.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் 

.பூமியில் வாழ்க்கை நெறியை முறையாக வளைந்து கொடுத்து வாழ்பவன் வானத்தில் உறைவிடமாக கொண்ட தெய்வத்தில் ஒருவராக மதிக்கப்படுவர்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து