சித்தவைத்தியம் சிக்கன மருத்துவம் எகரம் -எக்கியம்

      • சித்தவைத்தியம் சிக்கன மருத்துவம் எகரம் -எக்கியம் 

      • எக்கியம் என்றால் யாகம். யாக பூசைகளில் போடப்படும் யாகப் பொருட்கள் எரிந்து புகையாகி வரும்போது அதை சுவாசிக்கும் மக்களுக்கு மூலிகை பொருட்கள் சுவாசத்தின் வழியாக செல்வதால் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது.

      • எனவே, கோவில்களில் நடத்தப்படும் யாக பூசைகளில் கலந்து கொள்வதால் மனமும்,சுவாசமும் ஆரோக்கியம் அடைகிறது.

எண்குணன்

எண்குணன் என்றால் சிவன்,அஷ்ட லட்சுமி இவர்களுக்கும் சித்த மருத்துவத்திற்கும் தொடர்பு உண்டு.

சிவன் கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் மரம் வில்வமரம்.வில்வம் பழம் விநாயகருக்கு உகந்தது.வில்வ இலை சிவனுக்கு உகந்தது.

வில்வ இலையால் சிவ பூஜை செய்து நற்பலன் அடைந்தவர்கள் ஏராளம்.வில்வக் கொளுந்தை சாப்பிட்டால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வில்வ இலையை பிரசாதமாக வழங்குவது இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

சைவ கோவில்களில் வில்வமரம் வளர்த்து பாதுகாத்து வருவதன் பயன் மருத்துவக் குணம் உடையது என்பதை தெரிந்த பெரியோர்கள் வில்வ மரங்களை கோவில்களில் நட்டு தல விருட்சமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

அதன் பயனைப் பார்ப்போம்.வில்வம் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுத்தால் கண்களில் வரும் நோயான கண்வலி, கண்சிவப்பு, அரிப்பு நீங்கும்.எனவே கண்வலி வந்தால் இந்த வைத்தியம் கைகொடுக்கும்.

வில்வம் பூவை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் குடல் வலிமை பெறும்.

வில்வம் பழத்தை சாப்பிட்டால் மூளை தொடர்பான நோய்களை குணமாக்கும்.வில்வ இலை சாப்பிடுவதால் இதய நோய் வருவதை கட்டுப்படுத்தும் நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தீர்க்க வல்ல மருந்தாகும்.

காச நோய், சர்க்கரை நோய் வராமல் தடுக்க வில்வ இலை பயன்படுகிறது.அதனால் தான் வில்வங் கொளுந்தை குழந்தைகளுக்குக் கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் நம் பெரியவர்கள்.
வில்வம் இலையால் வீட்டில் பூசை செய்யும்போது காற்றுடன் கலந்து வரும் இலை வாசனை நம் சுவாசத்திற்கு நற்பயனைக் கொடுக்கும்.

வில்வ இலையை மட்டும் கழுவி மறுபடியும் பூசை செய்யலாம்.

சிவன் கோவிலில் பிரகாரத்தை சுற்றி சாமி கும்பிட்டால்,நடைப் பயிற்சி போல் இருக்கும்.சர்க்கரை நோய் வராமல் காக்கப்படும் என்பதற்காகவே உட்பிரகாரம்,வெளிப்பிரகாரம் என கோவிலை வலம் வந்து வணங்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

அஷ்டலட்சுமிகளின் அருட்கடாட்சம் கிடைத்தால் ஆரோக்கியம்,தைரியம் ,வீரம், விவேகம், வெற்றி, செல்வம்,இப்படி எல்லாமே கிடைக்கும் போது மனமும் ,உடலும் நன்றாகவே இருக்கும்.எனவே, அஷ்டலட்சுமியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.

எம்பெருமான் 

காக்கும் கடவுளாகிய எம்பெருமானை வணங்கினால் வாழ்வில் வளம் கிடைப்பது உறுதி. எம்பெருமான் பாத கமலத்தைப் பற்றியவர்கள் வாழ்வில் எல்லா நலனும் கூடும்.பெருமாள் கோவில் துளசியும்,அனுமன் கோவில் வெற்றிலையும் மருத்துவ குணம் உடையது.

துளசி 
பெருமாளுக்கு உகந்த செடி துளசி,கோவில்களில் துளசி செடி வளர்ப்பார்கள்.வீடுகளிலும் துளசி செடி வளர்ப்பார்கள்.

மத பேதங்களைக் காட்டி துளசியை சிலர் தள்ளி வைத்து விடுவார்கள்.ஆனால் துளசி ஒரு மருத்துவ குணம் நிறைந்த செடி.எனவே ,அதை பாதுகாக்கும் பொருட்டே வைணவக் கோவில்களில் தோட்டம் அமைத்து இருப்பார்கள்.

கபம் இளக்கி 
சளி தொல்லையால் மூச்சு விட முடியாமல் இருப்பவர்கள் துளசி சாப்பிட்டால் நுரையீரல்,மூச்சுக் குழாய் சம்பந்தப்பட்ட்ட நோய்களை நீக்குவதோடு ஒரு சுவாசத் தூண்டுதலாகவும் பயன்படுகிறது.

துளசியில் புரதச் சத்தும்,கார்போ ஹைட்ரேட் ,அமிலம்,உலோக சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதயம் சீராக இயங்க துளசி பயன்படுகிறது.இதய படபடப்பைக் குறைக்கும்.

ஆரம்பக் கட்ட காசநோய் ஏற்பட்டால் துளசியை நாள்தோறும் சாப்பிட்டு வர நோய் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.

பேன் அதிகம் இருந்தால் தலையில் இருந்து உடம்புக்கு வந்து தொல்லை செய்யும்.அதற்கு சீலைப்பேன் என்பார்கள். அப்படி வந்தால் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் சீலை பேன் போய்விடும்.

கருந்துளசியுடன் ,வில்வ இலை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.

துளசியை மென்று சாப்பிடுவதால் வாய் சம்பந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படும்.

துளசிக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.எனவே,நுரையீரல் நோய் வராமல் தடுக்கிறது.

துளசிச் சாறு அல்லது துளசிப் பொடி குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சீரணம்ஆகும். பசிக்கும். எனவே குழந்தைகள் பசித்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் ஏற்படும் வலி குணமாகும்.துளசி தொடர்ந்து சாப்பிட்டு வர மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

நாய்த் துளசியை வேருடன் பிடுங்கி சுத்தப்படுத்தி நீரில் போட்டுக்கொதித்து வேகவிட்டு கசாயமாக குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் வரும்போது வாந்தி வந்தால் துளசியுடன் கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் வாந்தி வருவது நிற்கும்.
துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.துளசி காற்றை சுவாசிக்கும் போது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து