சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம்

சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம் 

''சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள்''. சிவனே வைத்திய நாதன் .சித்தர்கள் காடுகளில் சிவலிங்கங்களை வைத்து மூலிகை செடிகளை மருந்தாகவும்,காய்,கனிகளை உணவாகவும் உண்டு பல நூறு காலம் உயிருடன் வாழ்ந்து சித்தி பெற்றவர்கள்.

அகத்தியர் எழுதிய சித்த வைத்திய நூல் சில கிடைக்கப் பெற்றன.உணவே மருந்தாக பயன்படுத்தி நோயின்றி நமது முன்னோர்கள் வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்..

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் '' .
''உண்டி வெய்யோர்க்கு உறுபிணிஎளிது''
-முதுமொழிக் காஞ்சியில் கூடலூர் கிழார் கூறுகிறார்.

''மீ தூண் விரும்பேல் ''
''நுண்மை நுகரேல் ''
''நோய்க்கு இடம் கொடேல் ''
-என்று ஆத்திச் சூடியில் ஔவையார் கூறியுள்ளார்.

நோயில்லாமல் வாழ உண்ணும் உணவே மருந்தாக்கி மூலிகை உள்ள மலைகள் ,குன்றுகள் எல்லாம் தெய்வம் வழிபடும் கோவில்கள் ஆகி தமிழ்க்கடவுள் முருகன் அமர்ந்த இடம் எல்லாம் மூலிகை மருத்துவ செடிகள் ,நோய் போக்கும் மூலிகை காற்று ,தண்ணீர் உடல் நோய் போய் உள்ளஆரோக்கியமும்,அமைதியும் கொடுக்குமிடமாகும்.


காலத்தின் மோகம், அவசரவாழ்க்கை அலட்சியம் இவற்றால் சித்த மருத்துவத்தின் சிறப்பை நாம் மறந்து விட்டோம்.


நாம் உண்ணும் உணவில் உள்ளமருத்துவக் குணம்,இயற்கை தந்தது.இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது உணவே மருந்தாக இருந்தது. சித்த மருத்துவம் தமிர்களுக்கே உரிய சிறந்த மருத்துவம்.


பல தலைமுறை கண்ட தமிழ் சித்த மருத்துவம்,பலருக்கும் பயன்பட வேண்டும் என எளிமையாக எழுதப்பட்ட நூல் ''சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம் ''


இந்த மருத்துவக் குணங்களைப் பயன்படுத்தி வாழும் போது நோயற்ற வாழ்வு வாழ்வதுடன் நோயிற்காக செலவு செய்யும் பணமும் மிச்சமாகும்.
இந்த நூலை எழுதியவர் செந்தமிழ் வாணி ச.மல்லிகா அவர்கள். நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் சித்த மருத்துவ மனை ஆராய்ச்சிமைய தலைமை மருத்துவர் எஸ்.நடராஜன், எஸ்.எம்.எஸ்.அவர்கள்.வாழ்த்துரை தந்திருப்பவர் கோவை வசந்தவாசல் கவிமன்ற செயலாளர் தமிழருவி கோவை கோகுலன் அவர்கள்,.


முருகன் திருவருளாலும், சித்தர்கள் அருளாலும் ,மூத்தவர் சொல் கேட்டல் அமிர்தம் என்பதற்கிணங்க மூத்தவர்கள் ஆகிய மூதாதைகள் ஆ.குருவம்மா ,வி.ஆறுமுகம் ஆசியாலும் ஆறுதலைமுறைகள் கண்ட மருத்துவத்தை தனது காலத்தில் நூலாக்கி மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூல் ஆசிரியர்.


100 தலைப்புகளில் ,உயிர் எழுத்தாகிய அகரத்தில் உயிர் எழுத்துக்கள் வரிசையில் அருகம்புல்லில் ஆரம்பித்து மூலிகையின் பயன்பாட்டை எளிய முறையில் விளக்கமாக எழுதப்பட்ட நூல் .


''நோய் வருவது இயற்கை -பிறர்
மனம் நோகாமல் சகிப்பது வலிமை ''

''மாற்றம் மனதில் பிறப்பது
ஏற்றம் பெற விரும்பின்
சீற்றம் குறைத்து சீராக்கி
நாட்டம் கொண்டு உழை
ஓட்டம் காணும் நோய் "


துளசி ,கற்பூரவல்லி,கீரை,மஞ்சள் ,இஞ்சி ,பூண்டு,கடுகு, மிளகு , சீரகம் ,சுக்கு வெந்தயம்,வெங்காயம் ,கடலை ,எள்ளு, தேங்காய் ,வேம்பு , இலுப்பை ,சூரியகாந்தி, பால், தயிர் வெண்ணெய் ,நெய், மோர் ,கடுக்காய், மாசிக்காய் ,வேம்பு வாழை பனை, அத்திக்காய் ,மா, பலா, கொய்யா என உண்ணும் உணவில் உள்ள மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்ள பயன்படும் நூல்.


வாதம், பித்தம்,கபம், என்ற மூன்று குணங்கள் தான் நோயிற்கு காரணம்.


துவர்ப்பு, புளிப்பு -வாதம்
உப்பு, கசப்பு - பித்தம்
இனிப்பு, கார்ப்பு - கபம் 


இவற்றை அளவுடன் உண்டு நோயைக் கட்டுப்படுத்தி வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல்.


''பச்சைக் காயை உண் - உனக்குள்
வாழும் நோயைக் கொல்''


தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆதி பிரணவம் அறிந்து அக்னி முன் உறுதி எடுத்து,சுவாசப் பயிற்சி எடுத்து ,உடலில் உள்ள வெப்ப ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள ''ஓம் '' என்ற மந்திரத்தை உச்சரித்து உடல் கட்டுபாட்டுடன் வாழ்வது வாழும் முறை என்று சித்த மருத்துவத்தில் வகுத்து வைத்திருக்கிறார்கள்.


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்கிறார் வள்ளுவர். 

உணவின் மீது அதிகப் பற்று வைக்காமல் அளவுடன் உண்டு நோயின்றி வளமுடன் வாழ வழிகாட்டும் நூல்.


சித்த வைத்தியம் சிக்கன மருத்துவ நூல். இது ஸ்ரீ சாரதை பதிப்பகம் வெளியிட்ட நூல் .ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.படித்து நோய் வரும் முன் காத்து பல்லாண்டுவாழ வாழ்த்துகிறோம்.


பக்கம் 248 விலை 120/-
வெளியீடு
ஸ்ரீ சாரதை பதிப்பகம்,
பிரம்ம இல்லம், எண்.70 சக்தி நகர்,
நேருநகர் மேற்கு ,காளப்பட்டி அஞ்சல்,
கோயம்புத்தூர் - 641948, செல்.போன் - 98420 49231
Email. editorchandran@gmail .com.
========================

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து