திருக்குறள் குறள் சுவை அறிவோம்

குறள் சுவை அறிவோம் திருக்குறள் 

18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வானம் மழைபெய்யவில்லை என்றால் ,பூலோகத்தில் தேவர்களுக்கான திருவிழா பூசைகள் நடக்காது.
19.தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

வான் உலகத்தில் இருந்து வானம் மழை பெய்யவில்லை என்றால் தானம் தவம் இரண்டு அறங்களும் புவி உலகில் தங்காது

20.நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு .

தண்ணீர் இல்லை என்றால் எந்த உயிரும் வாழமுடியாது.வானத்தில் இருந்து மழை பெய்யவில்லை என்றால் ஒழுக்கமும் சரியாக அமையாது.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து