பழமொழிக் கதைகள் -’பல்லுப் போனால் சொல்லுப் போச்சு ‘’

 • பழமொழிக் கதைகள்
  =======================
  ‘’பல்லுப் போனால் சொல்லுப் போச்சு ‘’
  --------------------------

 • காலை நேரம் பரபரப்பாக இருந்தது..ரகுவை பல் விளக்க பல்பசையை எடுத்துக் கொடுத்தாள் ரமா.

  பல் விளக்க மாட்டேன்.பல் விளக்க மாட்டேன் என தலையை ஆட்டிய ரகு வெளியே ஓடினான்.
  அவனைப் பிடித்து இழுத்து வந்த ரமா கட்டாயப்படுத்தி விளக்க ஆரம்பித்தாள்.’’அழுது கொண்டே தூ… தூ… என துப்பிக் கொண்டே அழுது கொண்டு இருந்தான் ரகு.

  ஒருவழியாக பல்விளக்கி ஆகி விட்டது. அடுத்தது குளிக்க வைக்க துணியை களைந்தால் ,வேண்டாம்..வேண்டாம் என குதித்தான் ரகு.

  ‘’நீயே குளி’’ என்ற ரகுவை , நல்ல பையனில்லை என சமாதானம் செய்து கொண்டே ஒரு வழியாக குளியல் வேலை முடித்து வெளியில் வரும்போது மணி 7.30.

  இன்னும் அரை மணிநேரத்தில் கிளம்பி ஆகவேண்டும், என்று அவசர...அவசரமாக பள்ளி சீருடை மாற்றி காலை சிற்றுண்டி ஊட்டி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வருவதற்கும் பள்ளிக் கூட பேருந்து வருவதற்கும் சரியா இருந்தது.

  பேருந்தில் ரகுவை ஏற்றிவிட்டு பேருந்தில் அமர்ந்த பின் கிளம்பும் போது டாட்டா காண்பித்து விட்டு உள்ளே வந்தாள் ரமா .

  இது தினமும் காலையில் நடக்கக் கூடிய சம்பவம் தான்,இருந்தாலும் ,பாட்டி கல்யாணிக்கு ஏதோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

 • வெற்றிலையை இடித்து பல் இல்லா வாயில் உதப்பிக் கொண்டவள் ,மனதில் தோன்றிய எண்ணத்தையும் உதப்பிக் கொண்டாள்.

  மாலை நான்கு மணிக்கு வந்த ரகு, துணி மாற்றி கை,கால் கழுவி பழம் சிறிது சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் விளையாட வந்தான் ரகு.

  பாட்டி கல்யாணி தூக்கி உச்சி முகர்ந்து மடியில் அமர்த்திக் கொண்டவள், உதப்பி வைத்து இருந்த வெற்றிலையை துப்பி விட்டு தன் மனதில் இருந்த எண்ணத்தை கூறலானாள்.

  ‘’ரகு, பாட்டிக்கு எத்தனை பல் இருக்கு என்று பார் என்றாள்’’ பாட்டி.

  ‘’பாட்டி உங்களுக்கு பல்லே இல்லை ‘’ என்றான் ரகு கைகளை ஆட்டிக் கொண்டு .

  ‘பாட்டிக்கு வயசு ஆகிவிட்டது பல் போச்சு, அத்துடன் சொல் போச்சு.’...

  ...நீ வளரும் பிள்ளை நன்றாக பல் விளக்கி பல்லைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் பல் நீண்ட நாட்களுக்கு வரும்.

  ‘’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
  நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி “ -என்பார்கள்

  நாலடியாரிலும்,திருக்குறளிலும் வாழ்க்கைக்கான நெறி முறைகள் எல்லாம் சொல்லி இருப்பதைப் படித்தால் வாழ்க்கை உறுதிப்படுவது போல் பல்லை ஆலங்குச்சி , வேலங்குச்சியிலும் துலக்கும் போது பல் உறுதியாகும்...

  ...பல்பசையில் அதைத்தான் சேர்த்து இருக்கிறார்கள்.பல் உறுதிப்பட தினமும் காலை, இரவு பல் துலக்க வேண்டும். அடம் பிடிக்கக் கூடாது’’ என்றாள் பாட்டி..

  பாட்டி ஏதோ கதை சொல்கிறாள் என நினைத்துக் கொண்டு ம்...ம்… என கேட்டுக் கொண்டிருந்த ரகு. தினமும் பல் விளக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டான்.

  மறுநாள் ரமா பல்பசையுன் வந்தாள் ரகுவிடம்.

  ‘’அம்மா அதைக் கொடுங்கள்.நானே துலக்கிக் கொள்கிறேன் என பல் பசையை வாங்கிய ரகு சமத்தாக பல் துலக்க ஆரம்பித்து விட்டான்.

  ராமாவிற்கு ஒரே ஆச்சரியம். பாட்டியும் பேரனும் பேசியது ராமாவிற்குத் தெரியாது.அதனால் ,ரமா வியப்பாக பார்த்தாள் ரகுவை.

  நீங்களும் உங்கள் அம்மாவை ஆச்சரியப்பட வையுங்கள்..சமர்த்தாக பல் துலக்கி..
  ==============================

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து