பகுத்தறிவுப் பொங்கல்


அறுவடைப் பொங்கல்
ஆதவன் பொங்கல்
இன்சுவைப் பொங்கல்
ஈதலின் பொங்கல்
உழவின் பொங்கல்
ஊணுயிர்ப் பொங்கல்
எம்மினப் பொங்கல்
ஏரின் பொங்கல்
ஐங்கணப் பொங்கல்
மங்களப் பொங்கல்
ஒப்பிலாப் பொங்கல்
ஓங்குயிர் பொங்கல்
அவ்வளவுந் தைப் பொங்கல்
இ.'.தின்பப் பொங்கலே

அறுவடை விழாவை உருவடைப் பொங்கல்
வருடந் தோறும்  வருமிப் பொங்கல்
உலகம் போற்றும் உழவின் பொங்கல்
பலன்தரும் பயிரின் அறுவடைப் பொங்கல்
பைந்தமிழ் நாட்டின் பகுத்தறிவுப் பொங்கல்
நான்குநாள் விழாவாம் எம்தைப் பொங்கலே

பொங்கல் முன்னாள் போ (க்)கிப் பண்டிகை 
மங்கையர் மார்கழி நோன்பி ருந்து 
நாள்தொறும் நன்கு வாசல் பெருக்கி 
கோலங்கள் போட்டவை மேலே மாட்டுச் 
சாணி உருண்டை  களைவைத் தவைமேல் 
பூக்கள் வைத்து புத்துணர்வு னூடே 

மார்கழி இறுதி நாளில் போ (க்)கிப் 
பண்டிகை  யாக  கொண்டா   டிடவே 
வெப்பத் தீயில் குப்பை கூளங்கள் 
போட்டுப் பொசுக்கிப் போக்கிடு  வோம்மே 
பழையன போக்கி புதியன புதுத்திடத்தான் 
Share this Post:

எழுதியவர் சந்திரன்

உங்களுடைய கருத்து