மருத்துவத் தொடர் - சித்த-சிக்கன மருத்துவம்

 உகரம் உசைக்காலம்

வைகறைப் பொழுது விடியும் காலத்தில் எழுந்திரிக்கும் போது வெளிமண்டலத்தில் இருந்து வந்திருக்கும் சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது உடலுக்குப் புத்துணர்வு ஏற்படுகிறது.
''குயில் கூவி துயில் எழுப்பும்'' என்பது போல் குயில், குருவி, காகம், அணில், பறவையின் காணம் காதுக்கு சங்கீதமாகும்.


உசைக் காலம் என்பது பிரம்ம முகூர்த்தம் என்பர். இந்த நேரத்தில் படிப்பது,உடல் பயிற்சி செய்வது,பாடல் பாடுவது,பூஜை செய்வது இவற்றிற்கு உகந்த நேரம்.மனம் மகிழ்ச்சி அடையும்.மனம் அமைதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் இருந்தால் நோய் பக்கத்தில் வர பயப்படும்.வந்தாலும் காற்று போல் பறந்தோடி விடும்.


உச்சி 


தலையின் மையப்பகுதி ,பிறந்த குழந்தை சுவாசிக்கும் பகுதி உச்சிக்குழி,உச்சியில் சூடு,வெப்பம் தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்,''உச்சியைக் காய வைக்கக் கூடாது'' என்று பெரியவர்கள் சொல்வார்கள்.


உச்சி குளிர எண்ணெய் தேய்,எண்ணெய் தேய்த்துக் குளி என்பது எல்லாம் உச்சி வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் இருக்கத்தான் .உச்சி வெப்பமானால் முடி உதிரும்.


உடல் சூடு 


உடல் சூடு ஆனால், வயிற்றுவலி,நீர்க்கடுப்பு,சீதபேதி போன்ற நோய்கள் தாக்கும்.வயிற்றுவலி ஏற்பட்டால் வயிற்றிலும்,உச்சியிலும் குளிர்ந்த நீரை உள்ளங்கையில் எடுத்து அழுத்தித் தேய்த்தால் சூட்டு வலி குறையும்.(அல்லது) நல்லெண்ணெய் தேய்த்தாலும் வலி குறையும்.


நீர்க்கடுப்பு அதிக சூட்டால் வருவது.வெயிலில் அலைந்தாலும், நீர்ச்சத்து,உடலில் குறைந்தாலும் நீர்க்கடுப்பு வரும். இவ்வாறு வரும்போது ,குளிர்ந்த தண்ணீர் அல்லது மோர், எலுமிச்சை சாறு, புளிபானம் குடித்தால் சூடு குறைந்து நீர்க்கடுப்பு நிற்கும்.
சிறிது சுண்ணாம்பை எடுத்து கால் கட்டை விரல் நகத்தின் மேல் தடவ சிறிது நேரத்தில் நீர்க்கடுப்பு போய்விடும்.


சீதபேதி 


சீதபேதி வெப்பம் அதிகமாவதால் வரும் நோய்சீதபேதி. சீதபேதி அதிகமானால் இரத்தக் கடுப்பு கூட வந்துவிடும்.எனவே, சீதபேதி வந்தால் உடனே வெந்தயம் சிறிது எடுத்து வாயில் போட்டு நீர் ஊற்றி விழுங்கி விடுங்கள்.இதற்கு ஆரம்பம் என்றால் நின்று விடும். அவ்வாறு நிற்கவில்லை என்றால் சர்க்கரை அரை கப் எடுத்து சிறிது நீர் ஊற்றி சீரா செய்து அதை ஆறிய பின் எடுத்து சாப்பிடுங்கள் உடனே நிற்கும்.


மாதுளம் பழம் பிஞ்சு எடுத்து அரைத்து குடித்தால் உடனே நிற்கும். அல்லது மாதுளம் பழம் வெள்ளை இதழுடன் சாப்பிட்டாலும் உடனே நிற்கும்.சர்ப்பத்தில் நீர் சேர்க்காமல் அரை டம்ளர் குடிக்க சீதபேதி நின்று விடும்.


மோர் குடிக்கலாம்.மோர் சாதம் சாப்பிடலாம்.இப்படி உடனே சூட்டை குறைக்கக் கூடியவற்றைச் சாப்பிட்டு உடனே சீதபேதி போகாமல் நிறுத்தி விடலாம்.


உப்பு
''உப்பில்லா பண்டம் குப்பையில்'' என்பார்கள். உப்பு இல்லாமல் சமையல் செய்ய முடியாது.செய்தாலும் சுவையில்லாமல் சாப்பிட முடியாது.சமையலுக்கு அவசிய தேவை உப்பு.


சமையலுக்கு உப்பை பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.மருந்தாகப் பயன்படுத்துதைப் பார்ப்போம்.


பல் மளு மளுப்பாக இருந்தால் ,பற்பசை,பல்பொடியுடன் சிறிது உப்பு சேர்த்து விலக்கினால் பற்கள் நன்றாக இருக்கும்.


தொண்டையில் சளி கட்டிக் கொண்டு இருப்பது போல் இருந்தால் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு தொண்டை வரும் வரை தண்ணீரை வாயில் ஊற்றி துப்பினால் தொண்டைக் கட்டு சளி போகும்.


கொதி நீர் அல்லது எண்ணெய்,எதிர் பாராமல் பாத்திரத்தை திறக்கும் போது உடம்பில் ஆவி பட்டுவிட்டால் அந்த நேரத்தில் தூள் உப்பு சிறிது எடுத்து அந்த இடத்தில் தடவி விட வேண்டும்.இவ்விதம் செய்யும் போது எரிச்சல் இருக்கத்தான் செய்யும். சற்றுப் பொறுத்துக் கொண்டால் கொப்பளம் வருவது தடுக்கப்படும்.அதனால் புண் வராமல் காக்கப்படும்.


எதிர் பாராமல் காதில் எறும்பு ,சிறு வண்டு போய்விட்டால் காதுக்குள் குடைய ஆரம்பித்து விடும். அந்த சமயத்தில் சிறிது நீர் எடுத்து அதில் சிறிது உப்பு போட்டு கலக்கி காதில் ஊற்ற வேண்டும். உப்பு நீர் பட்ட உடனேயே எறும்பு அல்லது வண்டு அங்கு இருக்காமல் வந்து விடும்.
தண்ணீருடன் திரும்பும் போது தண்ணீருடன் செத்து அல்லது உயிருடன் வந்துவிடும். காது குடைச்சல் நின்றுவிடும்.


சிலருக்கு வயிற்று வலி வரும்.அப்போது முருங்கை இலையை பறித்து அதை கழுவி உள்ளங்கையில் வைத்து சிறிது உப்பு சேர்த்து கசக்கினால் சாறு வரும்.அதை 1/4 டம்ளர் அளவு எடுத்து குடித்தால் சிறிது நேரத்தில் வலி போய்விடும்.


''முறித்து வளர்க்கும் முருங்கை
கசக்கிப் பிழிந்து சாற்றை
சடக்கென குடிக்க காணாமல்
போகும் வயிற்று வழி''


சில காலங்களில் பழ சீசனில் 'ஈ ' வந்து விடும்.அதை போக வைக்க 1/2 கப் நீரில் சிறிது உப்பு,சில கற்பூர வில்லைகளைப் போட்டு கலந்து தெளித்து கூட்டினால் 'ஈ ' தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.உப்பு சுத்தமாக வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.பொருட்கள் கெடாமல் பதப்படுத்தவும் பயன் படும் .ஊறுகாய் போடப் பயன்படுகிறது.
                                                                                                                                      

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து