விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

 விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது..

 தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..

 17 நாட்கள் நடந்த இந்த ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க நாளிலும் நிறைவு நாளிலும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன .


இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர்.

போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்ல முயன்றனர்.ஆனாலும்பதக்கங்களை பெற்றவர்களும் , தொட்டுவிடும் தூரத்தில் பதக்கங்களை பெற தவற விட்டவர்களும் உண்டு.
 இந்தப் போட்டியில் இந்தியா 1 வெள்ளிப் பதக்கத்தையும், 1 வெண்கலப் பதக்கத்தையும் மட்டுமே பெற்றது. இந்தியா பதக்கம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, துப்பாக்கிசுடுதல், வில்வித்தை, குத்துசண்டை உள்ளிட்ட போட்டிகளில் ஒரு பதக்கம்கூட பெறாதது ஏமாற்றத்தை அளித்தது. 


 ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையாடிய அமெரிக்கா பட்டியலில் முதலிடத்தையும்,இங்கிலாந்து 2–வது இடத்தையும்,சீனா 3–வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா,ஒலிம்பிக் விளையாட்டில் 66 வது இடத்தை பிடித்து மிகவும் பின்தங்கியுள்ளற்கு காரணம் என்ன என்பதை இனியாவது நாம் சிந்திக்க வேண்டும்.

போதிய பயிற்சி, அதற்கு தேவையான பயிற்சி களம் போன்றவை சர்வதேச அளவுக்கு நம் நாட்டில் இல்லை என்பதும், திறமையானவர்களை சரியான முறையில் இனம் கண்டும், அவர்களை ஊக்குவிப்பது இல்லை என்பதும் பரவலான குறைபாடு.


பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்களை சரியான முறையில் தேர்வு செய்து சிறந்த முறையில் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் வருங்காலத்தில் இந்தியா பதக்கங்களை வெல்லும் .


அடுத்து 2020 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைப்பெறப் போகும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது திறமைகளை வெளிக்காட்டி பதக்கங்களை பெற வேண்டும் என்பதே அனைத்து இந்தியர்களின் ஆசையாக உள்ளது.


ரியோ ஒலிம்பிக்கில் சாதித்த சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் மற்றும் ஜித்துராய்க்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பரிசுகளையும், பாராட்டுக்களை பெற்றுள்ள ,போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த வீரர்-வீராங்கனைகளுக்கு ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது.
==========================

Share this Post:

எழுதியவர் சந்திரன்

உங்களுடைய கருத்து