வெளிநாட்டு மூலிகை ஒற்றுமை - வேற்றுமை

வெளிநாட்டு மூலிகை ஒற்றுமை-வேற்றுமை

நம் நாட்டில் உள்ள ஒரு பொருளைப்பற்றி வெளிநாட்டினர் ஆய்வு செய்து கூறினால் தான் நாம் அதை சிறப்பு வாய்ந்ததாக ஏற்றுக்கொள்வோம். வெளிநாட்டில் அமெரிக்கர்கள் மூலிகை தாவரங்களை உணவாகவே பயன்படுத்துவதை காண முடிந்தது.

அவர்கள் பயன்படுத்தும் மூலிகை மரங்கள் செடிகள் இவற்றில் சிலவற்றை எடுத்துக்காட்டாக பார்க்கலாம்.

அரசமரம், வேப்பமரம்

அரசமரம், வேப்பமரம் இரண்டும் நிழல் தரும் மரங்கள் ஆகவும் இல்லத்திற்கு காற்று தருவதற்காகவும் வளர்த்து இருக்கிறார்கள்.

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாடு இந்தியாவில் உள்ள மரங்களின் இலை பெரிதாக இருக்கும். அமரிக்காவில் உள்ள மர இலைகள் சிறிய அளவில் இருக்கிறது.

மேப்பிள்

'மேப்பிள்' மரங்கள் அதிகமாக வீடுதோறும் வளர்க்கிறார்கள். மரக்காற்று உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.இந்த மரத்தில் பால் வடியும் தன்மை உண்டு.

இதன் பாலை சேகரித்து சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை சேர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். சுத்திகரித்த பின்னர் தேன் போன்று சுவையுடன் உள்ளது.(ரொட்டிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் திரவ உணவாகப் பயன்படுத்துகிறார்கள்)

மேப்பிள் ஒரு நிறம் மாறும் மரம் .கோடையில் பச்சை நிறமாக இருந்து,இலை உதிர்காலம் வரும்போது மஞ்சள் ,சிவப்பாக மாறி உதிர்ந்து வளரும்.பார்க்க கண்ணுக்கு நல்ல காட்சியாகவும் இருக்கிறது.

பொதுவாக இங்கு குளிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து மரத்தில் வெறும் குச்சிகள் தான் இருக்கும். பனி காலம் முடிந்த சில நாட்களில் பின்னர் மொட்டுவிட்டு பச்சைபசல் என்று இலைகள் துளிர்த்து எங்கும் பசுமையாக காணப்படும்.

தைம்தைம்- இந்த இலை வாசனை ,காரத்தன்மை எல்லாம் ஓமம் போன்று உள்ளது.சீரணமாக ஓமத்தண்ணீராக , ஓமம் உணவில் சேர்த்து உண்பதற்கு நாம் பயன் படுத்துவோம்.

அமெரிக்க மக்களும் 'தைம் ' இலைகளை விருப்பத்துடன் ரொட்டியில் ,முட்டையுடன் சேர்த்து உணவாக உண்கிறார்கள்.இதன் மருத்துவக் குணம் மிக நீண்டு கொண்டே போகிறது.

சீரண சக்திக்கு, முடி வளர ,முடி உதிர்வது நிற்க,தோல் வியாதியை போக்க , மாத விடை இரத்தப் போக்கு, கேன்சர் போன்றவற்றை குணமாக்க 'தைம்' மூலிகை செடிமருந்தாக பயன்படுகிறது.

புளிச்சகீரை

நம்ம ஊரில் புளிச்ச கீரையை மட்டும் நாம் உணவில் கீரையாக பயன்படுத்துகிறோம். இங்கு தண்டுப் பகுதியை புளிப்பு சுவைக்காக சிறிது சிறிதாக வெட்டி பயன்படுத்தி உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

கைக்குத்தல் அரிசிபோன்ற சிவப்பு அரிசியையே உணவுக்கு பயன்படுத்துகிறார்கள் .அதில் புளிச்ச கீரை ,வேகவைத்த பயிறு வகைகள் , வெங்காயம் ,தக்காளி, வெள்ளரிக்காய் ,குடை மிளகாய் , கோஸ், காரட் இப்படி எல்லாமே பச்சை பச்சையாக உணவில் சேர்த்து சத்து மாறாமல் சாப்பிடுகிறார்கள்.

அவக்காடு

அவக்காடு - இது பெரியா கொய்யாக்காய் அளவு உள்ளது.இரண்டாக வெட்டி உள்பகுதியை மட்டும் சாப்பிட பயன்படுத்துகிறார்கள்.இதன் கொட்டை உருண்டை வடிவில் உள்ளது.

உள்ளே உள்ள பருப்பு மாங்கொட்டையில் உள்ள துவர்ப்பு போல் துவர்ப்பு சத்து மருத்துவக் குணத்துடன் உள்ளது.பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை பச்சையாக உண்டு ஆரோக்கியம் பெறுகிறார்கள்.

லூட்டஸ், ரோஸ்மேரி ,சுவிஸ் சாடு 

லூட்டஸ், ரோஸ்மேரி ,சுவிஸ் சாடு போன்ற இலைகளைப் பிரட்டின் (பன்) நடுவில் வைத்து பச்சையாக உண்ணுவதால் கொழுப்பு சத்து குறைந்து உடல் எடை குறைய பயன் உள்ள மூலிகை இலையாக உள்ளது. இப்படி மூலிகை இலை, செடி ,மரம் இவற்றை உணவில் சேர்த்து உண்பதை பார்த்து, சமைத்து உண்டு ஆய்வு செய்ததில் நமது சித்த மருத்துவம் எவ்வளவு தலை சிறந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

பச்சை ,துளசி, புதினா ,கொத்தமல்லி, செம்பருத்தி எல்லாமே இங்கு உள்ளது. இலை பெரிதாகவும்,செம்பருத்தி பூ பெரிதாகவும் இருப்பதே வேறுபாடு. கற்பூரவல்லி இலை மிகச் சிறியதாக ,தடிமன் குறைவாக உள்ளது.

வீட்டுத்தோட்டத்தில் தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரை போன்றவைகளை வளர்ப்பதை காண முடிகிறது.

வீட்டிற்கு முன்பும், பின்புறமும் புல் வளர்ப்பதால் பச்சை போர்வை விரித்தது போல் கண்ணுக்கும் விருந்து. அதன் காற்று சுவாசத்திற்கும் நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

ஏரிகள் எதையும் மூடுவது இல்லை.ஏரியைச் சுற்றி வீடுகள்,பூங்கா ,தங்கும் விடுதி இப்படி நாங்கள் இருந்த பகுதியில் மட்டும் சிறிதும் பெரிதுமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதால் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது.

இயற்கை உரத்தையே பயன்படுத்துகிறார்கள் .மருந்து தெளிக்காமல் வலைவைத்து வண்டுகளை, பூச்சிகளை டப்பாக்களில் பிடிக்கிறார்கள். இயற்கையுடன் ஒன்றி வாழ்கிறார்கள். பழமை மாறாமல் பாதுகாத்து வாழ்கிறார்கள். அமெரிக்காவில் முதலில் வாழ்ந்தவர்கள் செவ்விந்தியர்கள் என்பது ஆராய்ச்சி உண்மை.

நமது ஊர் தாழி, நாழி ,மரவை, பானை ,பாத்திரம்,சடை பின்னுதல் இப்படி நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

குளிருக்கு தகுந்த உடைகளை பயன்படுத்துகிறார்கள். இயற்கை மூலிகைகளை உணவுடன் உண்பது வியக்க வைத்த உண்மை .

வெளிநாட்டினர் குளிருக்காக மருந்து போல் மது அருந்துகிறார்கள்.நம்ம ஊரில் மொடாகுடியர்கள் ஆகி மதுவுக்கு அடிமையாவது வருந்தத் தக்கது.எதையும் மேலோட்டமாக பார்த்து கடைப்பிடிப்பதை விட ஆய்வு செய்து கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

இங்கும் குடும்பம்-குடும்பமாக வாழ்கிறார்கள். மூன்று , நான்கு குழந்தைகள் இல்லாத வீடே இல்லை.

கூட்டு குடும்பமாக வாழ்ந்து விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.எங்கும் நல்லதும் ,கேட்டதும் கலந்து இருப்பதுவே உண்மை.இது இறைவனின் படைப்பு என உணர முடிகிறது.

எனவே தாவரங்கள், மூலிகைகள் உயிரினம் வாழ இறைவனால் படைக்கப் பட்டது. அதை, நாம் பாதுகாத்து, பயன் படுத்தி வாழ்ந்தால் மருத்துவச் செலவை மிச்சப்படுத்தி நோயற்று நூறுவயதையும் தாண்டி வாழலாம்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து