ஆடு சிறுகதை

காலை நேரம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்களும்,பெண்களும் என பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்.சிறுமி அகிலா பாலர் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள்.

சுசிலா அவளை குளிக்க வைத்து, உடைமாற்றி காலை சிற்றுண்டி கொடுத்து விட்டு சன்னல் அருகில் அமரவைத்துவிட்டு தான் கிளம்ப ஆயத்தமானாள்.சிறுமி அகிலா மரங்களையும், அதில் அமரும் காகம் ,மைனா இவைகளை கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.


அப்போது அவள் கவனம் வேறு பக்கம் சென்றது.கீழ் வீட்டில் துள்ளிக்குதித்து ஆடுகளும் ,அதன் குட்டிகளும் விளையாடிக்கொண்டு இருந்தன.அதை பார்த்த படி நின்று கொண்டு இருந்தாள் அகிலா.

ஆட்டுக்குட்டி அங்கு இருந்த கழிவு நீர் தொட்டியில் ஏறி குதித்துக்கொண்டு இருந்தது.திடீர் என மூடி உடைந்து ஆட்டுக்குட்டி உள்ளே விழுந்து விட்டது.அதைக் காப்பாற்ற நினைத்த தாய் ஆடும் உள்ளே விழுந்து விட்டது.ஆடும் அதன் குட்டியும் மே…..மே….என கத்தஆரம்பித்து விட்டன.

கூட்ட மாக  நின்ற மற்ற ஆடுகளும் விபரீதம் உணர்ந்து மே….மே…என கத்தி அபயக்குரல் கொடுத்தது.சென்னை வாழ் மக்களின் பரபரப்பில் ஆட்டுக்குட்டிகளின் அலறல் யார் செவிகளிலும் விழவில்லை.

அகிலா பார்த்துக்கொண்டே இருந்ததால் அந்த சிறுமி எதோ விபரீதம் என்பதை உணர்ந்து கொண்டாள்.அம்மா….அம்மா…. என அலற ஆரம்பித்து விட்டாள்.மகளுக்கு தான் என்னவோ ஆகிவிட்டதோ என வந்த சுசிலா…மகள் கைகாட்டிய பக்கம் பார்த்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஆடு கத்தும் சத்தமும் அதன் விபரீதமும் புரிந்தது.உடனே சுசிலா தன மகள் அகிலாவை தூக்கிக் கொண்டு கீழே  வந்து அங்கு நின்றவர்களிடம் விஷயத்தை சொன்னாள்.உடனேஅங்கிருந்த சிலர் பரபரப்பாக செயல் பட்டு , கழிவு நீர் தொட்டியில் விழுந்த ஆட்டையும் அதன்குட்டியையும் தூக்கிமேலே விட்டனர்.

வெளியில் வந்த ஆடுகள் மே…மே…. என தனது நன்றியை சொல்லிக்கொண்டு தலையை ஆட்டியபடி ஓடின.சிறுமி அகிலா ஆட்டை பார்த்து புன்னகைத்தாள் இரண்டு உயிர்களை காப்பாற்றியது தெரியாமல்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து