2-இலிங்கேற்ப மூர்த்தி
பிரம்மாவிற்கு 2000 சதுர்யுகம் ஒரு நாள் ஆகும். அவர் நாள் கணக்குப் படி துயிலச் சென்றார்.
புயல் வெள்ளம் தோன்றி கடல் பெருக்கல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் அழிந்தது.
திருமால் ஒரு ஆல் இலையில் மேல் குழந்தை வடிவில் நித்திரை செய்தார். முனிவர்கள் திருமாலை வணங்கினர்.
துதிப் பாடல் கேட்டு விழித்த திருமால் பழைய உலகை தேடத் தொடங்கினார். அது பாதாளத்தில் அமிழ்ந்து இருந்ததைக் கண்டார்.
வராக உருக் கொண்டு பாதாளம் சென்று தனது கொம்பினால் குத்தி எடுத்து வந்து முறைப்படி நிறுத்தியவர் பாற்கடலில் படுத்து யோக நித்திரையில் இருந்தார்.
ஆயிரம் சதுர்யுகம் கழியப் பிரம்மா இரவு காலம் நீங்கி, பகல் காலம் தொடங்கக் கண்விழித்து உலகை பார்த்தார்.
தேவர்கள், மனிதர்கள், செடி, கொடிகள் முதலியவற்றை படைத்தார். பூலகங்களையும், தேவ உலகங்களையும் திரட்டி இந்திரனை அரசர் ஆக்கினார்.
திருமால் யோக நித்திரையில் திருப்பாற்கடலில் இருப்பதைக் கண்டு எழுப்பினார் நீ யார்? என பிரம்மா கேட்க!
நான் உனது தந்தை என திருமால் சொல்ல. பிரம்மா நித்திரையில் இருந்த போது திருமால் தோன்றியதை அறியாத பிரம்மா! மறுக்கவே,
இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றி யுத்தம் நடந்தது.
நாரத முனிவர் சமரசம் செய்ய வந்தும் இருவரும் கேட்கவில்லை.
சிவன் ஜோதி ரூபமாக வந்த அடிமுடி காணச் சொன்னார்.ஜோதி வடிவான வெப்பம் தாங்காமல் வராக உருவில் பூமியை தோண்டி அகலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், ரசாதலம், பாதாலம் என்னும் சப்த லோகங்களும் தேடிச்சென்றார்
மகாலட்சுமி இருக்கும் அடிபாகத்திற்கு திருமால் சென்றார்.
அங்கும் வெப்பம் தாங்காமல், ஜோதியின் அடிப்பாகம் தெரியாமல் சிவனை சரணடைந்தார் திருமால். அப்போது பூமிக்கு மேலே வந்து ஜோதி மலையை வணங்கி நின்றார் திருமால்.
பிரம்மா அன்னப் பறவை வடிவம் கொண்டு பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சணலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் என்னும் சப்த லோகங்களுக்கும் தேடிச் சென்றார் இறுதியில் முடியை காண முடியாமல் சரஸ்வதி இருக்கும் சத்தியலோகம் வரை சென்றார். வெப்பம் தாங்காமல் முடி காண முடியாத பிரம்மா சிவனே சரணடைந்தார்.
அப்போது ஜோதி மலை அருகில் நின்றார். அங்கு திருமால் இருப்பதைக் கண்டு அறிவு மயக்கத்தால் இருவரும் போர் செய்து பிழை செய்தோம்.
சிவனை வணங்கி அடிமுடி காண்போம். என சிவலிங்கம் பிரதிட்டை செய்து இருவரும் ஆகம முறைப்படி வணங்க நீலகண்டன் பார்வதி பாகமாக காட்சி தந்தார்.
தேவரீர் திருவடிகளில் நீங்காத அன்பும், அனுக்கிரகிக்க வேண்டும் என்று வேண்டினர்.
இனி இருவரும் ஒற்றுமையாக வாழ்வீர்கள் ஆக எனக் கூறி சிவபெருமான் மறைந்தார்.
ஜோதி சிறிது… சிறிதாக சுருங்கி மலையாக காட்சி தந்தது. பிரம்மாவும், விஷ்ணுவும் மூன்று முறை மலையை வலம் வந்து பணிந்து வணங்கினர். பின் அவரவர் பணிகளைச் செய்யத் தொடங்கினர்.
அவர்கள் வணங்கிய மலையே திருவண்ணாமலை ஆகும்.
“சக்திக்கு ஒருபாகம் தான்கொடுத்து
நின்றமலை
முக்திக்கு வித்தாய் முறைத்த மலை- எத்திசையும்
போற்மலை போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை மாற்று மலை அண்ணாமலை.
