அட்டாட்ட விக்கிரக லீலை
ஐந்து முகச் சிவமாம் சிவனும், ஆறுமுகச் சிவமாம் முருகனும் ஒன்றே என்று கூறும் 64 திருமேனிகள்.
கலியுக ஆண்டு 500இல் நிகழ் விளம்பி வருடத்தில் பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்டது.
தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி, ஆயுள் விருத்தியுடன், சர்வார்த்த சித்தியும், முக்தியும் வாய்க்கும். எனவே, 64 திரு மேனிகளை காண்போம்.
1-இலிங்கமூர்த்தி
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்கள் அற்றது லிங்கம்.
லிங்கம் நிறுவப்பட்ட பீடமே ‘சக்தி’ உருவமாகும்.
மேலே, உள்ள லிங்கம் சிவரூபம் ஆகிய ஞான உருவமாகும்.
சிவன் எழுந்தருளி உள்ள தேகமாகும் இந்த தேக லிங்கமே பரமசிவன்.
சிவலிங்கத்தின் வட்டமாக இருக்கும் பாகம் ருத்ர பாகம்.
கீழ்புற நான்கு மூலைகளும் பிரம்ம பாகம்.
லிங்கம் பொருத்தப்பட்ட பகுதியில் எட்டு மூலைகள் திருமால் பாகம் ஆகும்.
ஓம் பிரணவம் அ, உ, ம் என்பதாம்.
அ-சிவம்,உ -சக்தி,ம்-பரம்.
அகரம்- நாதம்
உகாரம்- விந்து
மகாரம் -கலை என்று வேதம் கூறுகிறது.
அருணகிரியார் திருப்புகழ் பாடலில் “நாதவிந்து கலாதி நமோ நம” என்கிறார்.
“மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பர விந்து நாதம்
நலந்தரு சக்தி சிவன்வடி வாகி
பலம்தரு லிங்கம் பராநந்தி ஆமே”
திருமந்திரம்.
