அர்ச்சுனா! இவ்வுலகில் தெய்வப் பண்பு உடையது என்றும். அசுரப் பண்பு உடையது என்றும் இரண்டு வகையாக மனித சமுதாயங்கள் உள்ளன.
தெய்வப் பண்பு உடையவனைப் பற்றி இதுவரை விரிவாக விளக்கப் பட்டுவிட்டது. அசுர இயல்புடையவர்களைப் பற்றியும் விரிவாக என்னிடம் கேட்டுக் கொள் என்கிறார் கிருஷ்ணன்.
அதாவது, தெய்வ இயல்புடைய மனித சமுதாயத்தின் இயல்பு, நடத்தை, நடைமுறை ஆகியன விரிவாகச் சொல்லப்பட்டு விட்டன.
அசுர இயல்பு உடையவர்களின் தன்மை, நடத்தை, நடைமுறை பற்றிச் சுருக்கமாகத் தான் சொன்னேன்.
அவற்றை முற்றிலும் விட்டொழிக்க வேண்டும் ஆகையால் அதையும் விரிவாகச் சொல்லப் போகிறேன். தெரிந்து கொள் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
அதாவது, அசுர இயல்பு உள்ளவர்களிடம் இம்மூன்றில் ஒன்று கூட இருக்காது. மாறாகப் புனித மின்மை, தீய நடத்தை, பொய் பேசுதல் இவையே இருக்கும் என்கிறார்.
உலகம் ஆதாரமற்றது, முற்றிலும் பொய்யானது, ஈஸ்வரன் அற்றது, தானாகவே வெறும் ஆண், பெண் உறவினாலேயே உண்டானது என்றும்…
காமத்தையே அடிப்படையாகக் கொண்டது இது தவிர வேறு என்ன இருக்கிறது.என்றும், தர்மமோ! அதர்மமோ! அல்ல என்றும், இவ்வுலகம் எப்பொழுதும் இருக்கக் கூடியதும் அன்று.
பிறப்புக்கு முன்னும், இறந்த பின்னும் ஆத்மா என்பது இருப்பதில்லை. அதைப் படைப்பவனும் கிடையாது. படைப்பின் ஏற்பாட்டைச் செய்தவரும் இல்லை.
அடக்கி ஆள்பவனான ஈஸ்வரனும் கிடையாது. இந்த சராசர உலகம் ஆண், பெண் உறவால் மட்டுமே உண்டானது. ஆகவே, காமம் தான் பிரபஞ்சத்திற்குக் காரணம். இதைத் தவிர வாழ்வில் வேறு பயன் கிடையாது என்று அசுர குணம் படைத்தவர் கூறுவர் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா!இந்தத் தவறான கருத்துக்களைப் பற்றிக் கொண்டு எவர்களுடைய இயல்பு சீரழிந்து விட்டதோ, இவர்களுடைய புத்தி மந்தமாகி விட்டதோ அவர்கள் அனைவரும் தீமையையே நினைப்பவர்கள்.
கொடுமையான செயல்கள் புரிந்து நாசத்திற்காக முனைவார்கள். நாஸ்திகக் கொள்கையாளர்கள். ‘ஆத்மா’ என்ற ஒன்று உள்ளதாக ஏற்பதில்லை.
உடலையே நான் என நினைத்து உலகியலையே உண்மை என நம்புபவர்கள். அதனால், அவர்களுடைய இயல்பு சீரழிந்து விடுகிறது.
நல்ல செயல்களில் அவர்களுக்கு ஈடுபாடு கிடையாது ஏற்பதும் இல்லை. அவர்களுடைய புத்தியும் பெரிதும் மழுங்கி விடுகிறது. எதையும் சிற்றின்ப நோக்கில் தீர்மானிப்பவர்கள். எதையும் சுக போகங்களுக்காகவே செய்பவர்கள்.
அவனுடைய மனம் எப்பொழுதும் பிறருக்குத் தீமையையே வரவழைத்துக் கொள்பவன். எண்ணம், சொல், செயல்களால் சராசர உயிர்களை அச்சுறுத்துவதும், நாசம் செய்வது போன்ற பயங்கரமான செயல்களில் ஈடுபடுவார்கள்.