கிருஷ்ணரின் கீதை
கேசவா! ஆயிரக்கணக்கான மனிதர்களில் யாரோ ஒருவன் தான் பகவானை அடைகிறான் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! மனித உடல் கிடைத்திருந்த போதிலும் முந்தைய பிறவிகளின் சம்சாரத்தால் புலன் நுகர்ச்சியில் ஈடுபாடு கொண்டு பகவானிடம் சிரத்தை, பிரியம் இல்லாமல் இருப்பதால் பக்தி வழியில் கண் பார்வையை கூட செலுத்துவது கிடையாது.
முன்வினை சம்சாரப் பயனாகவும் சிரத்தை, பேரன்பு, அகங்காரம், மமகாரம், ஆசை, பற்று, தோசம் இவற்றினால் பலவித இடையூறுகள் நேரும்.
ஆகவே, மிகச் சிலரே சிரத்தையுடனும், பக்தியுடனும் சாதனைகளை முழுமையாகச் செய்வார்கள். அதன் பயனாக இதே பிறவியில் பகவானுடைய நேரடியான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கிறது என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சனா! நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டும் எனக்குள் அடக்கம்.
இதில் இருந்து எதனால் தாக்கப்படுகிறதோ, அது எனது ஜீவரூப சோதனை என்று தெரிந்துகொள் என்றவர்…
எல்லா உயிரினங்களுக்கும் எனக்குள் உண்டானவை நானே சம்பூர்ணமான எல்லா உலகிற்கும் உற்பத்தியாகும் இடமும் ஒருங்குகின்ற இடமும் என்று தெரிந்து கொள்.
அதாவது அகில உலகிற்கும் நானே மூலகாரணம் என்னுடைய சுயரூபத்தில் அனைத்தும் அடக்கம்.
என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும் உயர்ந்த காரணம் இல்லை. இவ்வுலகு அனைத்தும் நூலில் நூலிலான மணிகளைப் போல என்னிடம் கோர்க்கப்பட்டுள்ளன என்று விவரிக்கிறார் கிருஷ்ணன்.
மேலும், கூறுகிறார் அர்ச்சனா! நான் நீரில் சுவையாகவும் சந்திரன், சூரியன் இவர்களின் ஒளியாகவும், எல்லா வேதங்களின் ஓம்காரமாகவும், ஆகாயத்தின் ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சனா! மண்ணில் புனிதமான நறுமணமாகவும், நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன். அவ்வாறு எல்லா உயிரினங்களிலும் உயிராகவும், தவம் செய்பவர்கள் இடத்தில் தவமாகவும் இருக்கிறேன்.
சராசரங்கள் அனைத்திற்கும் நிலையான விதை என்று என்னை அறிந்து கொள். நான் அறிவாளிகள் உடைய அறிவாகவும், தேகம்படைத்தவர்களுக்கு தேகமாகவும் இருக்கிறேன்.
பரதகுல செம்மலே! நான் வலிமை மிக்கவர்களுடைய ஆசையும், பற்றும் நீங்கப் பெற்ற வலிமையாக இருக்கிறேன்.
மேலும், உயிரினங்களில் அறத்திற்கு மாறுபடாத சாஸ்திர சம்மதமான காமமாகவும் இருக்கிறேன்.
பரதகுலத் தோன்றல்களில் சிறந்தவன். உன்னிடத்தில் இந்த அசுரபலமும் இல்லை. அதர்மத்தின் வேராகவும் இகழத்தக்கதுமான எத்தகைய காமமும் இல்லை.
உன்னிடம் காமமும் பற்றும் அற்ற தூய தான பலம் இருக்கிறது தர்மத்திற்கு உடன் பாடான மிகத் தூயதான காமம் இருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்துகிறார் கிருஷ்ணர்.
அர்ச்சனா! எந்த உணர்வுகள், சத்வ குணத்தில் இருந்து தோன்றியவையோ, எவை ராஜோ குணத்தில் இருந்து தோன்றியவையோ, எவை தமோகுணத்தில் இருந்து தோன்றியவையோ அவை அனைத்தும் என்னிடம் இருந்தே தோன்றியவை என்று அறிந்து கொள்.
ஆனால், உண்மையில் அவற்றில் நானு
ம், அவை என்னிடமும் இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
