கேசவா! “ மற்ற தேவதையே வழிபடுதல்” என்று கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், வருணன் போன்ற தேவதைகளை என்னிடம் இருந்து வேறுபட்டவர்களாக எண்ணி…
எந்த நோக்கம் நிறைவேற வேண்டுமோ அதற்கான தேவதைகளை வழிபட்டு தியானம், ஹோமம், விரதம், உபவாசம் இருந்து வணங்கி சட்டதிட்டங்களுக்கு ஏற்றபடி கடைப்பிடித்து மிக்க விழிப்புணர்வுடன் அவற்றை கட்டி காத்து ஆதரிப்பது தான் மற்ற தேவதைகளை வழிபடுதல் எனப்படுகிறது என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், விவரிக்கிறார், மற்ற தேவதைகளை பகவானின் வடிவங்களாகவே உணர்ந்து பகவானுடைய ஆணைப்படி பயனில் ஆசை இல்லாமல் பூஜை செய்தால்
அந்த பூஜை பிற தேவதைகளுக்கு என்று ஆகாமல் பகவானைப் பூஜை செய்ததாகவே ஆகிவிடும் என்கிறார் கிருஷ்ணன்.
பயன்களை அடைய விருப்பம் கொண்ட பக்தன் எந்தெந்த தேவதையின் சுயரூபத்தை சிரத்தையுடன் வணங்கி வழிபடுகிறானோ, அந்த பக்தனுக்கு அந்த தேவதையிடமே அசையாது இருந்து அருள் கொடுப்பேன்.
அம்மனிதன் அந்த சிரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையினுடைய பூஜையை செய்கிறான் என்னாலையே தேவதையிடம் இருந்து விரும்பிய போகங்களை சந்தேகம் இன்று அடைகிறான்.
ஆனால், சிற்றறிவு படைத்தவர்கள் ஆகிய அவர்களுடைய அந்தப் பயன் அழிவுடையதாக ஆகிறது.
வேறு தேவதைகளை வழங்குபவர்கள் அந்த தேவதைகளை அடைகிறார்கள் என்னுடைய பக்தர்கள் எவ்வித வழிபட்டாலும் முடிவில் என்னையே அடைகிறார்கள்.
பல பிறவிகள் கழிந்தாலும் அவனுக்கு பகவானைப் பெற்றுத் தரும் வரை அந்த பக்தி ஓய்வதில்லை.
இதுவே, பக்தியின் பெருமை இப்படி பகவனை அடைந்து விட்ட பக்தன் பகவானே விட்டுப் பிரிவது என்பது ஒருகாலும் இல்லை. ஆகவே, பக்தி, பக்தன், பகவான் மூவரும் ஒன்றாகி விடுகின்றனர்.
அறிவற்றவர்கள் என்னுடைய இணை அற்றதும், அழிவற்றதும் மேலானதுமான தன்மையை அறிந்து கொள்ளாமல் மனம், புலன்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவனான சத், சித்,ஆனந்தமயமான பரமாத்மாவான என்னை மனிதனைப் போல பிறப்புள்ளவனாக கண்களால் காணக்கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று எண்ணுகிறார்கள்.
என்னுடைய யோக மாயையால் மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் புலப்படுவதில்லை.
மனித சமுதாயம் என்னை பிறப்பற்றவன் என்றும் அழிவற்ற பரம்பொருள் என்றும் அறிவதில்லை.
நான் பிறப்பு, இறப்பு உள்ளவன் என்று எண்ணுகின்றனர். யோக மாயை என்று எனக்குக் கட்டப்பட்டது என்னுடைய சிறப்பான ஆற்றல் அது. என்னுடைய திவ்ய ஞானத்தை மறைக்க முடியாது என்ற கிருஷ்ணன்
அர்ச்சுனா முன்பே உயிர்
வாழ்ந்து காலமாகி விட்டவையும், இப்பொழுது இருக்கின்றவையும் அவ்வாறே இனித்தோன்ற போகின்றவையும் ஆன எல்லா உயிரி இனங்களையும் நான் அறிவேன்.
ஆனால், சிரத்தையும், பக்தியும் இல்லாத எந்த மனிதனும் என்னை அறிவதில்லை. உலகில் விருப்பு, வெறுப்புகளால் உண்டான சுகம், துக்கம் முதலிய இரட்டைகள் வடிவான மயக்கத்தினால் எல்லா உயிரினங்களும் மிகுந்த அறியாமையை அடைகின்றன என்கிறார் கிருஷ்ணன்.
