எட்டாவது அத்தியாயம்
அட்சர பிரம்மயோகம் ‘அட்சரம்’,’ பிரகமம்’ என்ற இரண்டு சொற்களும் பகவானுடைய சகுணம், நிர்குணம் என்ற இரண்டு சுய ரூபங்களையும் குறிப்பன.
‘ ஓம்’ என்பது பகவானின் ஒரு திருநாமம் அதையும் ‘அட்சரம்’ என்றும் ‘பிரகமம்’ என்றும் கூறுவார்கள்.
இந்த அத்தியாயத்தில் பகவானுடைய சகுண, நிர்குண சுயரூபம் பற்றியும், ஓம்காரம் பற்றியும் வர்ணனை வருகிறது. ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு “அட்சர பிரம்ம யோகம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! பிரம்மம் எனப்படுவது மிக உயர்ந்ததும் அழிவற்றதுமானது. அதன் சுயரூபம் அதாவது ஜீவாத்மா அத்யாத்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
சராசரங்களின் இருப்பவை உண்டு பண்ணுகின்ற தியாகம். கர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
கேசவா! ‘பரமம்,’ ‘அட்சரம்’ என்பது பிரம்மம் என்று கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா!’ பிரகமம் ‘என்ற சொல் நிர்குணமான உருவமற்ற சத்,சித், ஆனந்தமயமான பரமாத்மாவை குறிக்கும். பரபிரம்ம பரமாத்மாவும் பகவானும் ஒரே தத்துவம் தான்.
சராசரங்களின் இருப்பை உண்டாக்குகின்ற படைப்பு, தியாகம் என்ற செயலே கர்மம் என்று கூறுவதன் கருத்தை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பூத என்ற சொல்லில் அசைவன, அசையாதன ஆகிய எல்லா பிராணிகளும் அடங்கும்.
இந்த பிராணிகள் உண்டாவது, வளர்வது எல்லாம் எந்த தியாகத்தினால் நடைபெறுகின்றனவோ, எது படைப்புக்கும், காப்புக்கும் ஆதாரமோ அந்த தியாகத்தின் பெயர் தான் கர்மம்.
ஹோமம் செய்யப் படும்போது அது சூரியனைச் சென்றடைகிறது. சூரியன் மூலமாக மழை பொழிகிறது. மழையில் இருந்து உணவும், உணவில் இருந்து உயிரினங்களும் தோன்றுகின்றன.
இவை எல்லா செயலும் பகவானுடைய அதிசங்கல்பம் தான். எனவே,எல்லாம் என்றவர் பகவானின் செயல் அன்றி வேறு அல்ல.
அர்ச்சுனா! மரண காலத்திலும், மனிதன் என்னையே நினைத்துக் கொண்டு சரீரத்தை நீத்துக் கிளம்புகிறானோ, அவன் என் சுயரூபத்தையே அடைகிறான். இதில் சிறிது கூட சந்தேகம் இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
