கேசவா! ஆயிரம் யுகங்கள் என்பது எவ்வளவு காலத்தை குறிக்கிறது அது பிரம்மாவின் பகல் இரவு என்ற கணக்கு என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! ‘யுகம்’ என்பது தேவயுகத்தைக் குறிப்பிடுகிறது.
சத்யயுகம், திரேதாயுகம், திவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் ஒன்று சேர்ந்தால் ஒரு தேவயுகம் தேவர்களுக்கு இது ஒரு யுகம்.
நம்முடைய காலக் கணக்குப்படி 360 மடங்கு அதாவது நம்முடைய ஓர் ஆண்டு தேவர்களுக்கு 24 மணி நேரம் உடைய ஒரு பகல் இரவாகும்.
நமக்கு 30 ஆண்டுகள் தேவர்களுக்கு ஒரு மாதம் நம்முடைய முன்னூற்று அறுபது ஆண்டுகள் தேவர்களுக்கு ஓர் ஆண்டு.
இப்படி பன்னீராயிரம் தேவ வருசங்கள் சேர்ந்தது ஒரு தேவயுகம். இதையே மகாயுகம் நான்கு யுகம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையைக் கூட்டினால் நம்முடைய ஆண்டுக் கணக்குப்படி 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளாகின்றன.
தேவ வருசங்களின் கணக்குப்படி பன்னிரண்டு நூறு தேவ வருசங்கள் நம்முடைய கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
24, 100 தேவ வருசங்கள் திவாபரயுகம் 8 லட்சத்து 64,000 ஆண்டுகள் ஆகும். (கலியுகம் போல் இரு மடங்கு)
36, 100 தேவ வருசங்கள் திரேதாயுகம் பன்னிரண்டு லட்சத்து 96 ஆயிரம் (கலியுகத்திற்கு மூன்று மடங்கு) ஆண்டுகள் ஆகும்.
48, 100 தேவவருசங்கள் சத்யயுகம் 17 லட்சத்தி 28 ஆயிரம் (கலியுகத்திற்கு நான்கு மடங்கு) ஆண்டுகள் ஆகும்.
சத்யயுகம் வரை கூட்டிப் பார்த்தால் பன்னீராயிரம் தேவ ஆண்டுகள் ஆகின்றன. இது ஒரு தேவை யுகமாகும்.
இப்படி ஆயிரம் தேவயுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல். அவ்வளவு யுகங்கள் கொண்டது ஓர் இரவு ஆகும். என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! பிரம்மாவின் பகல் தொடங்கும் போது எல்லாவிதமான சராசரமான உயிர்த் தொகுதிகளும் அவ்வியக்கத்தில் இருந்து பிரம்மாவின் சூட்சும சரீரத்தில் இருந்து வெளிப்படுகின்றன.
மேலும், பிரம்மதேவனின் இரவு தொடங்கும் போது எல்லாவிதமான சராசரமான உயிர் தொகுதிகளும் அவ்வியக்கத்தில் இருந்து பிரம்மாவின் சூட்சும சரீரத்தில் இருந்து வெளிப்படுகின்றன.
அர்ச்சுனா! இந்த உயிரினங்களின் கூட்டம் மீண்டும்… மீண்டும் பிறந்து தன்வசம் இன்றி பிரகிருதி வசப்பட்டு இரவின் தொடக்க காலத்தில் மறைகிறது.
பகலின் தொடக்கத்தில் மறுபடியும் பிறப்பு உண்டாகிறது. தனித்தன்மை கொண்ட எந்த ஜீவராசி பரம்பொருளான பரமாத்மாவையே சரணாகதியாக ஒன்றாக கலந்தவர் அழிவதில்லை.
அழிவில்லாத தோன்றாத நிலையே உயர்ந்த கதியாகும். அந்நிலையை அடைந்த பிறகு மனிதர்கள் திரும்புவதில்லை அந்த நிலை பராமபதமாகும் என்கிறார் கிருஷ்ணன்.
