கேசவா! காலம் என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! இங்கே காலம் என்றால் மார்க்கம் என்று பொருள் கொள்ள வேண்டும். மேலும், காலாபிமானிகளான வெவ்வேறு தேவதைகளின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தையும், எல்லையையும் காலம் என்ற சொல் குறிக்கிறது.
கேசவா! உலகத்தினர் பகலிலோ, சுக்ல
பட்சத்திலோ, உத்தராயணத்திலோ மரிப்பது நல்லது என்று ஏன் நினைக்கிறார்கள் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா அப்படி உலகத்தினர் நினைப்பதும் ஒரு வழியில் சரிதான். ஏனென்றால், அந்த நேரங்களில் அந்தந்த காலாபிமானி தொடர்பு உடனடியாக ஏற்படுகிறது.
ஆகவே, அந்த வேளைகளில் நினைக்கின்ற யோகிகள் சென்றடைய வேண்டிய இடம் வர விரைவில் எளிதாகச் சென்று விடுகின்றார்கள்.
இரவிலோ, தேய்பிறையிலோ, தட்சிணாயனத்தில் உள்ள ஆறு மாதங்களிலோ இறப்பவர்கள் உடனே சென்றடைய வேண்டிய இடத்திற்கு போக முடியாது.
இரவில் இறந்தால் அவனுக்குப் பகல் அபிமானி தேவதையின் தொடர்பு பகல் உதயமான உடன் தான் கிடைக்கும்.
இதனிடையே அவன் அக்னி அபிமானி தேவதையின் ஆளுகையில் இருப்பான். தேய்பிறையில் மரித்தால் அவனுக்கு வளர்பிறையின் அபிமானி தேவதையின் தொடர்பு வளர்பிறை ஆரம்பத்தின் போது தான் கிடைக்கும். அதுவரை அவன் பகல் அபிமானி தேவதையின் ஆளுகையில் இருப்பான்.
அதுபோல, தட்சணாயனத்தில் இறப்பவன் அவனுக்கு உத்தராயண அபிமானி தேவதையின் தொடர்பு உத்திராயணம் வந்த பிறகுதான் கிடைக்கும்.
அதுவரை அவன் வளர்பிறையின் அபிமானி தேவதையின் ஆளுகையில் தான் இருப்பான் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எந்த வழியில் போகிறவர் திரும்பி வரமாட்டார். எந்த வழியில் போகிறவர் திரும்பி வருவார்.
இரண்டு வழிகளுடைய வேறுபாடுகள் என்ன? அவை யாவை? யாருக்கு எந்த மார்க்கத்தில் செல்ல தகுதி உண்டு என்பனவற்றை எல்லாம் சொல்லப் போகிறேன் கேள் என்கிறார் கிருஷ்ணன்.
எந்த வழியில் ஒளிமயமான அக்கினி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை, சுக்லபட்ச அபிமான தேவதை,உத்தராயணத்தின் அபிமான தேவதைகள்.
அந்த மார்க்கத்தில் இறந்த பிறகு செல்கின்ற பிரம்மத்தை அறிந்த யோகிகளான ஜனங்களை தேவதைகள் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டு பிரம்மத்தை அடைகிறார்கள்.
