கேசவா! ‘வாதம்’ என்பதை ஒரு விபூதி என்று கூறுவதன் பொருளை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா சாஸ்திர சர்ச்சை மூன்று வகைப்படும்.
1-அல்பம்
2-விதண்டா
3-வாதம் என்பதாகும்.
நியாயமானதா என்பதை பொருட்படுத்தாமல் தான் எடுத்துக் கொண்ட கட்சிக்கு வலுவூட்டுவதற்காகவும், எதிர்க்கட்சியைக் கண்டிப்பதற்காகவும் பேசுவது ‘அல்பம்’ எனப்படும்.
எதிர்க்கட்சியைக் கண்டிப்பதற்காக மட்டும் பேசுவது ‘விதண்டா’ எனப்படும்.
தன் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாராமல் உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டுச் செய்யப்படும் சர்ச்சை ‘வாதம்’ ஆகும். உண்மையின் நிர்ணயமும், நன்மை ஏற்பட வழியும் துலங்கும்.
அல்பம், விதண்டாவினாலும். தீயவை, கோபம், இம்சை, கர்வம் முதலிய குற்றங்கள் வளரும். எனவே, இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
தேவையானால் வாதத்தை ஏற்கலாம். இந்தச் சிறப்பினால் அதன் ரூபமாக இருக்கிறேன் என விவரிக்கிறார்.
அர்ச்சுனா! நான் எழுத்துக்களுள் அகரமாகவும், தொகைகளில் அல்லது தொடர்களில் உம்மைத் தொகையாகவும் இருக்கிறேன்.
அழிவற்ற முதலில் முடிவுமற்ற காலமும் ஆகவும். எல்லாப் புறங்களிலும் எனது முகம் கொண்ட விராட் சுயரூபம் மனுவாகவும் காத்து, பேணுபவனாகவும் இருக்கிறேன். அதனால், பரமேஸ்வரன் வேறு நான் வேறு அல்ல…
நான் எல்லாவற்றையும் அழிக்கின்ற மரண தேவதை யாகவும், இனி உண்டாகப் போகின்றவற்றிற்கு காரணமாகவும், மாதர்களுள் புகழ், செல்வம், சொல்லாட்சி, நினைவாற்றல், நினைவில் உள்ளதை தக்கச் சமயத்தில் வெளிப்படுத்துவது. தைரியம்,உறுதி, பொறுமை, இவற்றை கொடுக்கும் சக்தியாகவும் இருக்கிறேன்.
காணம் செய்ய தகுந்த வேதப் பகுதிகளுள் பிருகஸ் சாமம் என்ற சாமவேதப் பகுதியாகவும் சந்தங்களுள் காயத்ரீ என்ற சந்தமாகவும் நான் இருக்கிறேன்.
மதங்களுள் மார்கழி ஆகவும், பருவங்கள் ஆறினுள் வசந்த காலம் இவற்றில் தண்ணீர் ஊற்றாமலே எல்லா மரங்களும் துளிர்க்கின்றன. மலர்கின்றன, இக்காலத்தில் அதிக குளிரும் இருக்காது, வெயிலும் இருக்காது இக்காலத்தில் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கும். எனவே, இம்மாதத்தில் நான் இருக்கிறேன்.
