கேசவா! என்னுடைய தெய்வீகமான விபூதிகளுக்கு முடிவே கிடையாது என்பதை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! என்னுடைய சாதாரண விபூதிகள் ஒருபுறம் இருக்க என்னுடைய தெய்வீக விபூதிகளுக்கு முடிவு கிடையாது.
நீர், நிலம் இவற்றின் பரமணுக்களை எண்ண முடியாது.அது போலவே என்னுடைய விபூதிகளையும் எண்ணிக் கணக்கிட முடியாது.
அவை எத்தனை என்று யாரும் அறியவும் முடியாது. எடுத்துச் சொல்லவும் முடியாது. கணக்கற்ற பிரம்மாண்டங்களில் கணக்கற்ற விபூதிகள் உள்ளன. அவற்றைக் கடக்கவும் முடியாது. ஆகவே, இத்துடன் இந்த வர்ணனையை முடித்துக் கொள்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
எது எது சிறப்புடையதோ, ஒளி உடையதோ, சக்தி படைத்தோ அந்த அந்தப் பொருள் எல்லாம் என்னுடைய ஒளியின் ஒரு பகுதியின் வெளிப்பாடே என்று நீ அறிந்து கொள்.
தவிரவும் அர்ச்சுனா! இவ்வாறு அதிகம் தெரிந்து கொள்வதால் உனக்கு என்ன பயன்.
நீ கேட்டதால் என்னுடைய மிகவும் முக்கியமான விபூதிகளை எல்லாம் உனக்கு எடுத்துச் சொன்னேன். இவ்வளவு மட்டும் அறிந்தால் போதாது.
‘சாரத்தை இனி மேல் உனக்குச் சொல்லப் போகிறேன். இதை நன்றாகக் கவனித்துத் தெரிந்து கொள். அப்பொழுது உனக்குத் தானாகவே எல்லாம் புரியும். அதற்குப் பிறகு நீ அறிய வேண்டியது ஒன்றும் இல்லை’ என்கிறார் கிருஷ்ணன்.
மனம், புலன்கள், உடல் இவை சேர்ந்த எல்லாச் சராசர பிராணிகளும் போகப் பொருட்களும் அனுபவ தானங்களான சகல லோகங்களும் ஒரு சேர அடங்கிய பிரம்மாண்டத்தைக் குறிப்பிடுகிறது.
இந்தப் பிரம்மாண்டம் ஒரு சிறு அம்சத்தில் யோக சக்தியால் தாங்குகிறேன் என்கிறார். இவ்வாறு விபூதியின் வர்ணனைகளை விவரித்து கூறுகிறார் கிருஷ்ணன்.
பத்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.
