கேசவா! எல்லா உலகிலும் பகவானுடைய உருவமுள்ள சுய உருவத்தை உலகம் முழுவதும் எப்படி பார்ப்பது?
தந்தையோ, உற்றார், உறவினரோ, வேசம் போட்டுக் கொண்டு வந்தால் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்குப் பணிவிடை செய்ய பின்வாங்குவதில்லை.
அதுபோல, அகில உலகிலும் எத்தனை உருவங்கள் உள்ளனவோ, அத்தனையும் பகவானுடைய வேசங்களே,
நாம் பகவானை அடையாளம் கண்டு கொள்வதில்லை. ஆகவே, பகவான் வேறு, மற்றவை வேறு, என்று நினைக்கிறோம்.
பயப்படுகிறோம், பின்வாங்குகிறோம், அவற்றிற்கு சேவை செய்ய விரும்புவதில்லை.
ஆனால், உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் பகவானை அடையாளம் கண்டு கொள்பவன். எத்தனை உருவம் தரித்தாலும், நடைமுறையில் வேற்றுமைகள் தெரிந்தாலும், உள்ளத்தில் வணங்குகிறான்.
எடுத்துக்காட்டாக கன்றுகளையும், கோபி சிறுவர்களையும், அவர்களின் எல்லா பொருட்களையும் பலராமன் கண்ணனாகவே பார்த்தார்.
அதுபோல, கோபிகளும் தமது பிரேமை நிறைந்த கண்களினால் கண்ணனையே எங்கும் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதுபோல, பக்தனும் எங்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணன், ராமன், விஷ்ணு, சங்கரன், சக்தி, முருகன் என்று யாருக்கு எவர் இஷ்ட தெய்வமோ! அந்த தெய்வத்தின் உருவமுள்ள சுயரூபத்தை எங்கும் பார்க்க வேண்டும். இதுதான் பகவானுடைய உருவமுள்ள சுயரூபத்தை அகில உலகிலும் பார்ப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனன் கிருஷ்ணனின் திவ்ய திருமேனியிலும், அன்னை யசோதை குழந்தை கண்ணன் வாயிலும் கண்டனர். பக்த காசுபுகண்டியும் குழந்தை ஸ்ரீராமனின் வயிற்றில் அகில உலகையும் கண்டார்.
இதுபோல பகவானின் ஏதாவது ஒரு சுயரூபத்தில் அடங்கியதாக அகில பிரபஞ்சத்தையும் பார்க்க வேண்டும். இதுதான் பகவானது சகுண சுயரூபத்தில் அகில உலகத்தையும் பார்ப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
