பர்த்தா! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும், பற்பல விதங்களாகவும், பல நிறங்களாகவும், பல உருவங்களாகவும் கொண்ட வையாகவும் உள்ள தெய்வீகமான உருவங்களைப் பார் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! உலகில் காண்பதற்கரியதும் வியப்பை அளிப்பதுமான பொருள் ‘திவ்யம்’ எனப்படும்.
என்னுடைய மேனியில் காணப்படுகின்ற வெவ்வேறான எண்ணற்ற வடிவங்கள் அனைத்தையும் பார். அற்புதமான யோக சக்தியின் மூலம் படைக்கப்பட்டவை, உலகியலுக்கு அப்பாற்பட்டவை, ஆச்சரியமானவை, தெய்வீகமானவை என்கிறார் கிருஷ்ணன்.
பரத குல தோன்றலே அர்ச்சுனா! அதிதியின் புத்திரர்களான பன்னிரண்டு,ஆதித்யா களையும், எட்டு வசூக்களையும்,பதினோரு ருத்திரர்களையும், அசுவினி குமாரர்களையும் இதற்கு முன் கண்டிராத பற்பல ஆச்சரியமான உருவங்களையும் பார் என்கிறார் கிருஷ்ணன்.
உறக்கத்தை வெற்றி கொண்ட அர்ச்சுனா! இப்பொழுது என்னுடைய உடலில் ஒரே இடத்தில் சகல சராசரங்களோடு கூடிய உலகம் முழுவதையும் மற்றும் எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ அதைப் பார்.
அதாவது, என்னுடைய குணங்கள், பிரபாவங்கள், இவற்றை விளக்குகின்ற ஏதாவது காட்சியையோ அல்லது வெற்றி, தோல்விகளைப் பற்றி என்றாலும் பார்.
முன்பு நடந்தன வற்றையோ, இனி நடக்கப் போகின்ற வற்றையோ, நடந்து கொண்டு இருப்பனவற்றையோ ஆகிய எந்த நிகழ்ச்சிகளைக் காண விரும்பினாலும், அவற்றையும் இப்பொழுது இந்த மேனியில் ஒரு மூலையில். நேரிலே காண்பாய் என்கிறார் கிருஷ்ணன்.
ஆனால், என்னை நீ இந்த உன் ஊனக் கண்களால் பார்ப்பதற்கு சந்தேகம் இன்றி முடியவே முடியாது.
ஆகையால் உனக்கு உலகியலுக்கு அப்பாற்பட்ட தான தெய்வீகமானப் பார்வையைத் தருகிறேன். என்னுடைய தெய்வத்தன்மை பொருந்திய யோக சக்தியைப் பார் என்கிறார்.
தம்முடைய யோக சக்தியை வெளிப்படுத்தி அர்ச்சுனனுக்கு காண்பித்தார் கிருஷ்ணன்.
அதைப் பார்த்த தனாலேயே பகவானுடைய அற்புத யோக சக்தியின் தரிசனமும் கிடைக்கிறது அர்ச்சுனனுக்கு.
“ விராட் விஸ்வரூப தரிசனத்தின் மூலம் என்னுடைய யோக சக்தியைப் பார்” என்று சுய ரூபத்தைக் காட்டுகிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனனுக்கு தெய்வீகப் பார்வையை அளித்த கிருஷ்ணன், தெய்வீகமான விராட் விஸ்வரூபக் காட்சியை காண்பித்த விதத்தை திருதராஷ்டருக்கு விவரிக்கிறார் சஞ்சயன்.
அரசே! எவர் பெரியதிலும் பெரிய யோகேஸ்வரரோ அவர் மாகா யோகேஸ்வரர். சகல பாவங்களையும்,
துன்பங்களையும் போக்குபவர் ஹரி.
ஸ்ரீ கிருஷ்ணன் சாதாரண மனிதர் அல்லர். அவர் மிகப்பெரிய யோகேஸ்வரர். எல்லாப் பாவங்களையும், துன்பங்களையும் போக்குபவர் ஹரி.
மேலும் கூறுகிறார்…கிருஷ்ணன் எல்லா பாவங்களையும், துன்பங்களையும் அழிக்கின்ற சாட்சாத் பரமாத்மா என்று திருதராஷ்டிரரை எச்சரிக்கிறார் சஞ்சயன்.
