• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாடிசம்பர் 29, 2024கருத்துகள் இல்லை2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“அர்ச்சுனா!மனித உலகில் உன்னைத் தவிர வேறு யாராலும் இந்த விஸ்வரூபம் தாங்கிய நான் காணப்பட இயலாதவன்.”

“வேதங்களையும், யாகத்தின் செயல் முறைகளையும், கற்பதாலோ, தானங்களாலோ காணப்பட இயலாதவன்.”

“கர்மங்களாலும் கூடக் காணப்பட முடியாதவன். மற்ற உலகங்களிலும் சாதனை எதுவும் புரியாமலும் யாரும் பார்க்க முடியவே முடியாது,நீ சிறந்த வீரன். நீ இவ்விதம் பயப்படுவது அழகன்று” என்கிறார்.

இத்தகைய என்னுடைய கோரமான இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து உனக்கு கலக்கம் வேண்டாம். மதி மயக்கம் வேண்டாம். 

நீ பயத்தைத் துறந்து மன மகிழ்ச்சியுடன் அதே என்னுடைய விஸ்வரூபத்தில் சங்கு, சக்கர, கதை, பத்மம் இவற்றை நான்கு கரங்களிலும் ஏந்தி உள்ள விஸ்வரூபத்தை மறுபடியும் நன்கு பார்.

அந்த விஸ்வரூபம் இதோ உன் முன்னால் இருக்கும்போதே மறைந்து விட்டது. அதன் இடத்தில் விஷ்ணுவின்  இந்த சதுர்பூஜரூபம் வெளிப் பட்டிருக்கிறது. பயம் நீங்கி மகிழ்ச்சியோடு நீ இருந்த சதுர்புஜ ரூபத்தைப் பார் என்கிறார் கிருஷ்ணன்.

“வாசுதேவனான பகவான் அர்ச்சுனிடம்  இவ்வாறு கூறிவிட்டு மறுபடியும் அதே விதமான தன்னுடைய சதுர்புஜ விஷ்ணு விஸ்வரூபத்தையும் காண்பித்தார்”.

மறுபடியும் மகாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணன் இனிய வடிவமாக ஆகிபயந்திருந்த அர்ச்சுனனுக்குத் தைரியமூட்டினார். என்று திருதராஷ்டிரருக்கு விளக்கி கூறுகிறார் சஞ்சயன்.

ஜனத்தனா! உங்களுடைய இந்த மிகவும் இனியதான மானுட வடிவைப் பார்த்து இப்பொழுது நிலை பெற்ற மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன்.

உங்களுடைய இந்த இனிய மதன மோகன மானுட வடிவைப் பார்த்து என் இயல்பான நிலையையும் அடைந்து விட்டேன் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா!என்னுடைய இந்த சதுர்புஜ சுயரூபத்தை நீ இப்போது பார்த்தாயே இது காண்பதற்கரிதனது.

தேவர்கள் கூட எப்போதும் இந்த உருவத்தைக் காண்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்.

எவ்வாறு நீ என்னை பார்த்தாயோ இவ்விதமான சதுர்புஜம் கொண்ட நான் வேதங்களைக் கற்பதால் காணப்பட முடியாதவன், தவத்தினாலும் காணப்பட முடியாதவன், தானத்தினாலும் காணப்பட முடியாதவன், யாகம் செய்தாலும் காணப்பட முடியாதவன்.

“சதுர்புஜ விஸ்வரூபம் உள்ள நான் வேறு ஒன்றை பயனாகக்  கருதாத பக்தியினால் கண்கூடாகக் காணப்படக் கூடியவன்.”

“தர்வரீதியாக அறியப்படவும் கூடியவன். ஐக்கிய பாவத்தால் என்னிடம் ஒன்றி விடவும் முடியும்” என்கிறான் கிருஷ்ணன்.

“அர்ச்சுனா! எவன் ஒருவன் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் பொருட்டே ஆற்றி, என்னையே அடையத் தக்க மேலான கதியாகக் கொள்கிறானோ, அவன் என்னிடம் பக்தி பூண்டு பற்று அற்று உயிரினங்கள் அனைத்திலும் பகைமை இல்லாதவனாக இருப்பவன் அந்த அபூர்வ பக்தன் என்னை அடைகிறான்” என்கிறார் கிருஷ்ணன்.

பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

சிவன் மைந்தன்

ஜூன் 12, 2025

சிவன் மைந்தன்

ஜூன் 11, 2025

சிவன் மைந்தன்

ஜூன் 10, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

சிவன் மைந்தன்

ஜூன் 12, 2025

கவிஞர் மு. வாசுகி

ஜனவரி 1, 2020

கவிஞர் சுந்தர பழனியப்பன்

ஜனவரி 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

ஜனவரி 3, 2020
Latest Reviews
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Facebook Twitter Instagram Pinterest
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
© 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

Type above and press Enter to search. Press Esc to cancel.