தண்டபாணி அருளாலே தடைகள் விலகும்
தரம் உயர்த்திப் பார்ப்பான்!
மண்டப படிகளில் மக்கள் கூட்டம்
மனசார வாழ்த்திப் பார்ப்பான்!
உண்மை உள்ள இடத்தில் எல்லாம்
நன்மை செய்து பார்ப்பான்!
திண்மை கொடுத்து உறுதி கொடுத்து
திறமை வளர்த்துப் பார்ப்பான்.