தட்சப் பிரசாபதியின் புதல்விகள் கத்ரு ,விநதை.
காசியப முனிவரை மணம் செய்தனர் ஒரு நாள் உங்களுக்கு என்ன வரவேண்டும் என கேளுங்கள் என்றார் காசியப முனிவர்.
பழம் பொருந்திய ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்றாள் கத்ரு.
ஆற்றல் மிகுந்த இரண்டு பிள்ளைகள் போதும் என்றாள் விநதை.
விரும்பிய வரத்தை வழங்கினார் காசியப முனிவர் உரிய நேரத்தில் இருவரும் கருவுற்றார்கள்.
முட்டைகளை பிரசவித்தாள் கத்ரு .அதில் இருந்து ஆயிரம் பாம்புகள் பிறந்தன.
விநதை இரண்டு முட்டைகளை பிரசவித்தாள். பாம்பு குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு முட்டையை உடைத்து விட்டாள் விநதை.
மேல் பாதி உடல்வுடனும் கீழ் பாதி உடல் இல்லாமல் இருந்தான் மூத்த மகன். அவன் சூரிய பகவானின் தேரை செலுத்தும் சேவையை செய்து வருகிறான்.
அடுத்த முட்டையிலிருந்து ஒரு பறவை பிறந்தது. பிறந்த சில நாட்களில் பறந்து செல்லும் ஆற்றலுடன், பலவித விந்தைகளை கற்று சிறப்பானவனாக வளர்ந்தான்.
ஒரு நாள் சகோதரிகள் இருவரும் வனப்பகுதியில் நடந்து கொண்டிருந்தனர்.
வெள்ளைக் குதிரையை கண்டனர் இக்குதிரை என்ன நிறம் என்று கேட்டாள் கத்ரு.
சிரித்துக் கொண்டே வெள்ளை நிறம் என்றாள் விநதை.
தவறாக இருந்தால் நீ எனக்கு அடிமையாக வேண்டும் என கூறிய கத்ரு.
மனதில் தியானித்து தனது பாம்பு மகனை குதிரை வாலில் தங்கும்படி நினைத்தாள். இப்போது குதிரையின் வாலின் நிறம் மாறிவிட்டது பாம்பு தங்குவதால்.
தோற்றுவிட்டதாக கூறிய கத்ரு விநதையை அடிமைப்படுத்தி வேலை செய்ய வைத்தாள்.
தாயின் வேதனை குறித்து நாரதர் மூலமாக அறிந்த பறவை கருடன்.
கத்ருவிடம் சென்ற கருடன். தன். தாயாரை விடுவிக்கும் படி வேண்டினான்.
கத்ரு மறுத்துவிட்டாள். கருடன் கத்ரு இடம் மிகவும் போராடி கேட்டது. ஒரு நிபந்தனையுடன் சம்மதித்தாள்.
தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தை கொடுக்க வேண்டும் என்றாள் கத்ரு.
கருடன் தேவலோகத்திற்கு பறந்து சென்று அமிர்தத்தை எடுத்து வரும்போது இந்திரனுடன் போரிட வேண்டியது ஆயிற்று.
இந்திரன் ஏவிய வஜ்ராயுதம் கூட கருடனை ஒன்றும் செய்யவில்லை.
இந்திரன் மேல் தான் வைத்திருக்கும் மதிப்பால் இந்திரன் தோற்றதாக இருக்க வேண்டாம் என்று கூறினான் கருடன்.
அந்தப் பேச்சல் நெகிழ்ந்த இந்திரன். அமிர்த கலசத்தை கருடனிடம் கொடுத்தான்.
கருடன் கத்ருவிடம் அமிர்தத்தை கொடுத்து தாயை மீட்டிக் கொண்டான்.
அமிர்தத்தை தர்ப்பை காட்டில் மறைத்து வைத்தாள் கத்ரு.
குதிரையின் வாலில் இருந்த பாம்புகள் அமிர்தத்தை குடிக்க வந்தன.
கருடன் விரைந்து வந்து அமிர்த கலசத்தை எடுத்து இந்திரனிடம் கொடுத்து விட்டான்.
கத்ரு கோபம் கொண்டாள் என்னை ஏமாற்றிவிட்டாய் என்று.
வஞ்சனையை வஞ்சனையால் வென்றேன் அமிர்தத்தை கொடுத்தால் தாயை விடுவிப்பதாக சொன்னாய் அவ்வாறே செய்தேன். அமிர்தத்தை மீட்க எந்த நிபந்தனையும் இல்லை என்ற கருடன்.
இது தேவர்களுக்கு உரியது அமிர்தத்தை அடையும் தகுதி தங்களுக்கு இல்லை என்று கருடன் பறந்து விட்டான்.
அமிர்தத்தை உண்டு கருடா நீயும் தேவர்களைப் போல் வாழ் என இந்திரன் கூறினான்.
கருடன் மறுத்து விட
மகாவிஷ்ணு காட்சி தந்து முதுமையும், மரணமும் இல்லாமல் வாழ்வாய். எனக்கு இப்போது இருந்து முதல் வாகனமாக இருப்பாய் என அருளினார்.
பெருமாளின் திருவடியில் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற கருடன் அவர் திருவடி சேவையில் மூழ்கிப்
போனார்.