பெயர் -சு. பழனியப்பன்
பட்டப்படிப்பு -ஆசிரியர் பட்டம் படிப்பு
தந்தை. ந, சுந்தரம்-ஆசிரியர் (பணி ஒய்வு)
,தாயார் சு. சகுந்தலை
மனைவி இரா. யமுநேஸ்வரி -ஆசிரியை -பட்டதாரி . .
இரண்டு பெண் குழந்தைகள்
பிறந்தது கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்டம், பண்டரக் கோட்டை, மதுரா, அம்மாப்பேட்டை என்னும் சிற்றூரில்
பிறந்த ஆண்டு 1971 ஆம் ஆண்டு
குடும்பம் ஏழை நெசவாளர் குடும்பம் .எனது பெற்றோர் -மூதாதையர் நெசவுத் தொழில் செய்து வந்தனர் .வறுமையின் பிடியில் ஆட்கொண்டு இருந்தாலும் நெசவுத் தொழிலே ஒரு வேளை உணவு வழங்கியது.
இளமையிலே கவிதை எழுதும் பழக்கத்தைக் கொண்டதால் அவ்வப்போது கவிதை எழுதி நண்பர்களிடம் காண்பித்து , மகிழ்ந்து வந்தேன்.
2010 ஆம் ஆண்டு முதல் நூலை கிராமத்து கீதங்கள் என்ற பெயரில் வெளியிட்டேன் .அதன் வளர்ச்சியே 10.12 நூல்களுக்குச் சொந்தக்காரர் ஆனேன். .
படிப்படியாக கல்வி கற்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன் . மாணவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டு. மாணவர்களின் நலனில் கல்வியில் அக்கறை கொண்டு .உன் சுத்தம் எனும் தலைப்பில் கட்டுரை வடித்து மாவட்டட கல்வி அதிகாரிகளிடம் வழங்கி பாராட்டைப் பெற்றேன்.
பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறேன்.
பட்டிமன்ற , பாட்டுமன்ற, கவியரங்க பேச்சாளராக மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன் . .
எழுதிய நூல்கள்
- கிராமத்து கீதம்
- கிராமத்து தென்றல் -2013
- கிராமத்து குலவை 2014
- ஊருணி -2015
- துள்ளிவரும் துளிப்பா -2016
- என்னுள் வாழும் ஞானி
- நெகிழும்-2017
- மழலை கீதங்கள்
- திரெளபதியம்மன் பாமாலை-2017
- யாழ்-2018
- மித்ரா -2018.
ஆய்வுக்கட்டுரைகள்
- கண்ணதாசன் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
- இறையன் குறித்து வள்ளுவன் காட்டும் இலக்கிய நெறிகள்
- குரங்கில் இருந்துமனிதன்
- அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் நிலை
சைனீக ராகம் என்ற குருந்தகடையும் , சுந்தரபழநியப்பன் வாழ்க்கை வரலாறு என்ற நூலும் வெளி வந்துள்ளது
இவர் சித்தாந்த ரத்தினம் இலக்கியச் செம்மல் கலை இலக்கியச் சுடர், கவிச்சிற்பி சாதனை கவிஞர் ,கவிப்பேரொளி சேவைத் திலகம், சிறந்த சமூக சேவகர் உள்பட இதுவரை மொத்தம் 83 விருதுகள் பெற்றுள்ளார் .
இவர் எழுதிய படைப்புகள் மொத்தம் 28 சிற்றிதழ்களில் இடம் பெற்றுள்ளன.
மின்னஞ்சல் -kavisuba18@mail.com