கவிஞர் மல்லிகா

0

எனது பெயர் ச.மல்லிகா .1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி மதுரை மாவட்டம் பைக்காரா என்ற ஊரில் பிறந்தேன்.படிப்பு எம்.ஏ.தமிழ் .

  •  ஊர்-இராமேஸ்வரம்
  • .தந்தை பெயர் ஆ.மாணிக்கம். மின்சார வாரியத்தில் பணியாற்றி  ஒய்வு பெற்றவர்.
  • தாய்-மா. நாகம்மாள். இல்லத்துப்பெண்.
  • மா.இராதாகிருஷ்ணன் சகோதரர் .

 கணவர் பெயர் சோம. சந்திரன்.மதுரை மாவட்டம் தர்மாசனப்பட்டி கணவர் ஊர்.  கணவர் தினத்தந்தியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.மூன்று மகன்கள் ச.பால முருகன்-சொப்னா , ச.பாலகணேசன்-அனிதா , ச. பாலகிருஷ்ணன் -பிரேமா   திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். எல்லோரும் தமிழ் மீது பற்றுக்கொண்டு எழுதுபவர்கள். தற்போது, கணவரும் நானும் சேர்ந்து  ”ஸ்ரீ ஐசுவரியம் ” என்ற தமிழ் மாத இதழ் நடத்தி வருகிறோம்.இப்போது இணையதளத்திலும்  வருகிறது .

 கருவில் இருந்தே ஏற்பட்ட ஆன்மிகப்பயணம், எட்டாவது வயதில் இருந்து ஆன்மிகப் பயணம் ஆரம்பம். ஆனது. முருகனை குருவாகக் கொண்டு ஸ்ரீ சாரதையின் அருள் ஆசியுடன் ஸ்ரீ சாரதாம்பாள் தல வரலாறு,”பூவுலகின் பொற்காலம்” என்ற நூலும், ”கிருஷ்ணரின் கீதை” ஆன்மிக நூல்கள், ”வாழ்க்கை நெறி அந்தாதி ” முருகன் அருளால் எழுத தூண்டப்பட்ட நூல் .”கணபதி வழிபாட்டுப் பாடல்கள்”,”மும்மணி மாலை ” பாடல்கள் .

‘2016-ஆண்டு வாழ்க்கை நெறி அந்தாதி’ என்ற நூல் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா  தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது . அமெரிக்காவில் ஆறுமாதம்  தங்கி சித்த மருத்துவ செடிகள்  ஆய்வு செய்து  கட்டுரைகள் பல எழுதியுள்ளேன் .

 மேலும் ”நாட்டுப்புற அறிவுக் கதைகள்,”,”அதிர்ஷ்டம்  தந்த அற்புதம் ”, (இவை கிராமங்களில் சொல்லப்பட்ட   சிறுகதை தொகுப்பு)கடல் ஓசை , தேன்சிட்டு -கவிதை நூல்கள்,சித்தவைத்தியம் சிக்கன மருத்துவம் (சித்தவைத்தியம் பற்றியது) நூல் வெளியிட்டு உள்ளேன் 25 ஆண்டுகளாக இலக்கியம் மன்றம் சமுதாயம் சார்ந்து பணியாற்றி வருகிறேன்.

திண்டுக்கல் வளர் தமிழ் ஆய்வு  மன்றம் நடத்திய ஆய்வு கட்டுரைத் தொகுப்பில்  கட்டுரை இடம் பெற்றுள்ளது .

முருக இலக்கிய ஆய்வு கோவை நடத்திய கட்டுரை தொகுப்பில் தொகுதி -1 இல் கட்டுரை வெளிவந்துள்ளது .

தமிழ்த்தாய் அறக்கட்டளை- தஞ்சாவூர் நடத்திய  உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் 2016  கவிதை எழுதியதற்கு ‘கவித் தமிழ்ச் சுடர் ‘விருது .

பல அமைப்புகளிடம் இருந்து கவிக்குயில் சரோஜினி விருது, கண்ணியச் செம்மல் விருது, வண்ணப்பூங்கா விருது, பாரதிதாசன் பற்றாளர் விருது, ஔவையார் நினைவு விருது, தமிழ் மூதாட்டி ஒளவை விருது, செந்தமிழ்வாணி விருது, தமிழ்நாடு பெண்கள் எழுத்தாளர் அமைப்பு வழங்கிய கவிதைப் புதையல் ,அண்ணா நூற்றாண்டுப் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது , திருக்குறள் நெறியாளர், தமிழ்மாமணி ,விஸ்வகர்மா பண்பட்டுக்கழக கேடயம், விஸ்வகர்மா கல்வி அறக்கட்டளை சார்பில் .’விஸ்வகர்மா பெண் திலகம்’ என . பட்டம், விருதுகள் வழங்கி உள்ளனர்.

கிருஷ்ணரின் கீதை எழுதியதற்காக முருகன் அருளால் செந்தமிழ் வாணி  என்ற பட்டம் சீர்காழியில்(முருகன்) காட்சி தந்து வாங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .20 க்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் கவிதை, கட்டுரை எழுதி இருக்கிறேன் . இதழ்களிலும், கவிதை, கட்டுரைகள்   எழுதி வந்து கொண்டிருக்கிறது   .முக்கிய நாளிதழ்களான தினத்தந்தி , மாலைமலர் , தினகரன், தினமலர்  போன்றவைகளிலும் , ராணி, ராணி காமிக்ஸ்  , கண்மணி-மாலைமுரசு  , காமதேனு -இந்து , நாளிதழ்களிலும்  வெளி வந்துள்ளது .

இலக்கியப்பணி தவிர சமுதாயப்பணியும் செய்து வருகிறேன். இலக்கியமும் சமுதாயமும் இரண்டு கண்கள்.2018 ஆம் ஆண்டில் இருந்து ‘ஔவையார் மா மன்றம்’ தொடங்கி  தமிழ்ப் பணி , இறைப்பணி , சமுதாயப்பணி  செய்து வருகிறேன்.  பல கவிமன்றங்களிலும்  உறுப்பினராக இருந்து வருகிறேன்.

எனது  ஐந்து நூல்கள் தமிழக அரசு  நூலகம்  எடுத்துக்கொண்டு அனைத்து நூலகங்களுக்கும்  வழங்கியுள்ளது. 

கடல் ஓசை  என்ற நூலை  தூத்துக்குடியைச்  சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி  ஆய்வு செய்துமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதேபோல் சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி  மாணவி மா. தனலட்சுமி  ஆய்வுசெய்து  முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அதிர்ஷ்டம் தந்த அற்புதம்   என்ற நூலை சென்னை ராணிமேரி கல்லூரி மாணவி  சங்கவி என்பவர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது .

செம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை எழுதி கலந்து கொண்டேன் .

வளர் தமிழ் இயக்ககம் சார்பில்  தமிழுக்காக நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டேன் .

கோவை வ.உ. சி .பூங்காவில் நடந்த  ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டேன் .

இரத்ததானம், கண்தானம் செய்திருக்கிறேன் .

 சிறுபெண்ணாய் இருக்கும்போதே பக்தி  இறை பக்தி கொண்டவள் .முருகனை குருவாக எண்ணி அவர் சொல்லும் வழியில் நடப்பவள்.

 மதுரை ஆதினம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் ஆதினம், கஜபூஜை கந்தசாமி அடிகளார், குமரகுரு சுவாமிகள், சாந்தலிங்க சுவாமிகள், மருதாசல அடிகளார் , ஜெயேந்திர  சுவாமிகள், பங்காரு அடிகள்,வேலூர் சக்தி நாராயணி அம்மா ,  ஸ்ரீ ல ஸ்ரீ வாலைச் சித்தர், ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  விதுசெகர பாரதி சுவாமிகள், வள்ளலார் திருச்சபை ஊரன் அடிகள் கல்கண்டு சுவாமிகள்   போன்ற அடியவர்கள் ஆசியும் பெற்றுள்ளேன் .,

ஔவையார் 2 ஆம் ஆண்டில்  25 பெண்களுக்கு  ஔவையார் விருது வழங்கி பாராட்டப்பட்டது. அந்த விழாவில்  எழுத்துலகிற்கு  வந்து 25ஆண்டுகள்  ஆனதையொட்டி வெள்ளிவிழா மலர் வெளியிடப்பட்டது.

Share.

About Author

Leave A Reply