மனிதனின் முதல் எதிரி கோபம். கோபத்தை வென்றவன் மாமனிதன் ஆகிறான் .தன்னை அடிமை ஆக்குபவன் துன்பத்தில் உழல்கிறான் .
கோபப்படும் போது அவன் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் வேலை செய்து உச்சத்தில் இருப்பதால் தான் என்ன செய்கிறோம் என்பது கூட சிந்திக்க முடியாமல் போகிறது .
அந்த உச்ச கட்ட கோபத்தில் பிறரை துன்பப் படுத்துவதுடன் தானும் துன்பத்தில் சுழல்கிறான்.
- ”கோபம் ஏன் வருகிறது”. தான் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்ற நிலையில்…
2.பிறர் உயர்வைப் பார்த்து பொறுக்க முடியாத பொறாமை ஏற்படும் நிலையில் ..
3.தன்னால் ஒரு காரியத்தை செய்துமுடிக்க முடியாத நிலையில்…
4.தான் செய்வதே சரி என்ற மனப் போக்கால் பிறர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்….
5.தனக்கு ஏற்படும் ஆசைகள் நிறைவு பெறாத நிலையில்….
இப்படி கோபப்படும் போது தீமைகளே விளைகின்றன .நன்மைகள் தூரப் போகின்றன , இந்த உண்மையை உணர்ந்தால் கோபத்தை அடக்க கற்றுக் கொள்வோம்..
மகாபாரதத்தில் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம் கெளரவர்கள் நூறு பேரையும் வதைத்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்கு வந்தபோது ….
….திருதராஷ்டிரர் பீமனை ஆரத்தழுவ அழைக்கிறார் .
அப்போது திருதராஷ்டிரரின் கோபத்தை அறிந்து கொண்ட கிருஷ்ணர் பீமன் போன்ற உருவச்சிலையை நகர்த்தி அருகில் வைக்கிறார் .
கட்டி அணைத்து அந்த சிலையை நொறுக்கி விடுகிறார் திருதராஷ்டிரர் , பின் ‘பீமா என்னை மன்னித்து விடு மகனே’ என அழுகிறார் .
‘இப்போது நீங்கள் கொன்றது பீமனை அல்ல ,உங்கள் பொறாமையை அதனால் ஏற்பட்ட கோபத்தை நொறுக்கி கொன்று விட்டீர்கள்…’ .
‘பீமன் சாகவில்லை உயிருடன் இருக்கிறான்’ என பீமனை அருகே செல்ல அனுமதிக்க , ‘மகனே பீமா’ ..என்று ஆரத் தழுவுகிறார் திருதராஷ்டிரர், தன் தவறு உணர்ந்து