படிப்பு .முதுகலை நூலக அறிவியல்
என்னைப்பற்றி …
அப்பா பா கருப்பையா ,
அம்மா ஜெயலட்சுமி ,
கணவர் ஏ. முருகேசன் , மேலூர் சார்பு நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞராக உள்ளார்.
இரு பெண் , ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் .
தமிழார்வம்
நான் மேலூரில் உள்ள அரசு பேரன்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல் நிலை வகுப்பில் தமிழ்ப்பாட வேளையில் தமிழாசிரியை ந. சண்முகம் (பெண்) அவர்கள் கொடுக்கின்ற தலைப்பிற்கு கவிதை எழுதுவோம் .அப்போது எனது கவிதையை அதிகம் பாராட்டைப் பெற்றதால் தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
எனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகும், அதே தமிழாசிரியையிடம் விடைத்தாள் திருத்தும் பணிக்காக உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தேன் .எனக்குப் பாடம் சொல்லித்தந்த ஆசிரியயையிடமே பணிபுரிந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .புத்தகங்களுக்கு நடுவே வாழ்வது சொர்க்கத்திற்கு ஈடானவொன்று என்பதால் நூலக அறிவியல் படிப்பை தேர்வு செய்து படித்தேன் .
ஆனால் அதற்கான பணிவாய்ப்புகள் இன்னும் குறைவாகவே உள்ளது. நாளிதழில் கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசுவென்றேன் .மீண்டும் மற்றொரு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசுபெற்றேன்.
மதுரை திருக்குறள் புகழ் மணிமொழியன் அய்யா தலைமையில் திருக்குறள் பேரவையில் பேசினேன் .பரிசு பெற்றேன்.,பின்பு மணிமொழியன் அய்யாவின் அகவை எழுபது வாழ்த்து மலரில் கவிதைஎழுதி பலரின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். அவர்களின் ஊக்குவிப்பால் மதுரையில் நடந்த சங்கம் 2 என்ற நிகழ்வில் கவிதை வாசிக்கையில் அங்கு பார்வையாளராக அமர்ந்திருந்த மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் திருரவி தமிழ்வாணன் அவர்களின் பாராட்டைப் பெற்று பின்பு என் எழுத்து புத்தகமாக மாற முயற்சிகள் செய்தேன். இப்போதுமூன்று நூல்கள் வெளிவந்த நிலையில்எழுத்துப்பணியைதொடர்ந்து கொண்டிருக்கிறேன். .
எழுத்துப் பணிக்காக இதுவரைபெற்ற விருதுகள்;
கவி பாரதி , கவிப்பநிதி, விருதுக் கேடயம் , விருதுக் கோப்பைகள், திருப்பரங்குன்றம்-முற்போக்கு இலக்கியப் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது.
இவர்களும் இந்நாட்டில் கண்கள் என்ற நூலுக்கு அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகத்திடமிருந்து சிறந்த நூலுக்கான விருது பெற்றது.

தமிழ்ப்பணி
மாமதுரைக் கவிஞர் பேரவையின் உறுப்பினர், தமிழ் வளர்ச்சிக் காண கவிதைகள் எழுதுவது, நூல் விமர்சனம் எழுதுதல், வெற்றிமுனை, இலக்கியச் சோலை, ஸ்ரீ ஐசுவரியம் என்ற மாத இதழ்களுக்கு கவிதைகள் எழுதி வருகிறேன். இதுவரை 50 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன் .
எழுதிய நூல்கள்
- இவர்களும் இந்நாட்டின் கண்கள்
- அப்பாவை நேசிப்போம்
- நம்பிக்கை வெளிச்சங்கள்
சொல்ல விரும்புவது
அலைபேசியுடனே நாளைச் செலவிடும் இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் திறமையை நமது நாட்டுக்காக நல்ல முறையில் செலவிட வேண்டுகிறேன் .முதலில் ஒவ்வொரு பிள்ளைகளும் தன் பெற்றோரைக் கவனித்துக் கொண்டாலே நாட்டில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகிடைத்து விடும்.
எதிர் பார்ப்பு
எழுத்தாளர்களின் வாழ்வு சிறக்க அரசு ஏதேனும் முயற்சிக்க வேண்டும். பெண் எழுத்தாளர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
மின்னஞ்சல் -vasuki 16011973 @gmail.com.