சோம சந்திரன்

0

பெயர் சோம. சந்திரன்

தந்தை -ஆறு. சோமசுந்தரம் ஆசாரியார்

தாய் –வேலு அம்மாள்.

.பிறந்தது 1952-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி

பிறந்த ஊர் – மதுரை மாவட்டத்தின் எல்லைமுடிவில்உள்ள தர்மாசனப்பட்டி . கிராமத்தின் மேற்குப்  பகுதி மதுரைமாவட்டத்திலும்  ரோட்டின் கிழக்குப்பகுதி  அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் (இப்போது சிவகெங்கை )உள்ளது.

.மூதாதையர்கள் கிராமத்தில் உழவுத் தொழிலுக்கு  தேவையான பொருட்களை செய்து வந்தார்கள்.

படிப்பு -கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரை தொடக்க கல்வியும், அதன்பின்னர் கடியாபட்டி என்ற  ஊரில் ஆறுமுதல் எட்டாம்வகுப்புவரையிலும் , ஒன்பதாம் வகுப்புமுதல் தேவகோட்டையில் உள்ள ‘தே பிரித்தோ  உயர்நிலைப்பள்ளியிலும் படித்தேன்..

பணி–சென்னையில் இரண்டு ஆண்டுகள் சினிமா படப்பிடிப்பு நிலையத்தில், பணி புரிந்து வந்தேன். அப்போதே படிப்பதில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. எழுதுவதிலும் ஆர்வம் கொண்டு இருந்தேன் .அதன் காரணமாக ‘தினத்தந்தி ‘ பத்திரிகையில் பிழை திருத்துனராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து செய்தி ஆசிரியராகப் பணி உயர்ந்து  தமிழுக்குச் செயலாற்றும் பொறுப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் எம்.ஏ., தமிழ் படித்து பட்டதாரி ஆனேன். 41 ஆண்டுகள் பணிமுடிந்து பணி ஒய்வுபெற்றுள்ளேன்.

.எனது துணைவியார் மல்லிகா எழுத்தில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதால் அவருக்கு உறுதுணையாக தற்போது இருவரும் இணைந்து தமிழ்ப் பணி ஆற்றி வருகிறோம்.(www sree aisuwariyam.com)

முதலில் ‘ஸ்ரீ ஐசுவரியம் ‘ தமிழ் மாத இதழ் தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இளைய சமுதாயத்தின் வருங்காலத்தை கவனத்தில் கொண்டு அந்த இதழ் சாரம்சங்களை ‘இணைய தளம்  இதழாக மாற்றி தொடர்ந்து வெளி வந்து கொண்டுள்ளது

தொடர்ந்து மேலும்ஒரு இணைய தள பதிவாக  தமிழ் சங்கம்  தொடங்கி உள்ளோம். .(https;//tamilsangam.org)

நான் புதுச்சேரி  தினர்த்தந்தி அலுவலகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது சிங்கப்பூர் அரசு சார்பில் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட  பத்திரிகைகள் சார்பில் அவர்கள் நாட்டுக்கு சுற்றுலா செல்ல அழைப்பு வந்தது. அப்போது எங்கள்  தினத்தந்தி அதிபர் ஐயா பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள்  சிங்கப்பூர் சென்றுவர  எனக்கு வாய்ப்பு அளித்தார். தமிழ்நாட்டில் இருந்து தினத்தந்தி பத்திரிக்கை சார்பில் நான் மட்டும் சென்று வந்தேன்.

 இந்த சுற்றுலாவில் இந்தியாவின்  வெவ்வோறு மாநிலங்களில் இருந்து மொத்தம் பன்னிரண்டு பேர் கலந்து கொண்டோம்.நான்கு  நாள் சுற்றுப் பயணமாக நான் சிங்கப்பூர் சென்று  அந்த நாட்டில் சுற்றுலா தளங்களைப் பார்த்து வந்தது மறக்க முடியாதது.. அதைப்பற்றி சிறப்புக்கட்டுரை ஒன்றையும் தினத்தந்தி இதழில் பிரசுரித்து இருந்தோம். 

புதுச்சேரியில் தினத்தந்தி ஆசிரியராகப் பணிபுரிந்த போது மாணவர்களுக்கு நடந்த ஆச்சார்யா கல்வி நிறுவனத்தில் நடந்த கல்வி விழாவில் கலந்து கொண்டது .

புதுச்சேரியில் 20.04.2008 அன்று பாரதி தாசன் அறக்கட்டளை சார்பில் வேல் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் பாவேந்தர் பற்றாளர்  விருது பெற்றோம்.

2016 ஆம் ஆண்டு புதுச்சேரி கலை இலக்கிய மன்றம் சார்பில் ஸ்ரீ ஐசுவரியம் இதழுக்கு சிறந்த இதழுக்கான ‘இலக்கிய இனையர் விருது’ எனக்கும் எனது துணைவியாருக்கும் வழங்கப்பட்டது.  

தமிழ் நாட்டரசின் நிதி உதவி பெரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டு விருதுச் சான்றிதழ் .

இராமநாதபுரம் கம்பன் கழக 2017 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு விருதுச் சான்றிதழ் -கம்பன் எழுத்துச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர் .; 

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 17-வது மாநாடு திருச்சியில் நடந்தது .தினத்தந்தியில் 41 ஆண்டுகள் பணிபுரிந்ததை யொட்டி அந்த விழாவில் மூத்த பத்திரியாளர்” ‘ என்ற விருது வழங்கப்பட்டது.

editorchandran@gmail.com

Share.

About Author

Leave A Reply