மண்வாசனை மணக்கும் பொன் விளையும் பூமியிலே பச்சை போர்வை போர்த்தி பரந்து விளைந்த பூமி.
ஆடு மாடு மேய கோழிச்சண்டை போட
நாய்கள் குறுக்கே ஓட
வாத்து கூட்டம் நீந்த…
கலை மேட்டில் கேலிப்பாட்டு கன்னியான ஒரு பாட்டு திருமணத்திற்கு நலுங்குபாட்டு இறந்தவுடன் ஒப்பாரிப்பாட்டு
கூரை வீட்டில் வசித்தாலும் கூல் கஞ்சி குடித்தாலும்
ஒருவர் குறையை கேட்டு
அன்பு காட்டும் உள்ளம்.