உன்னால் முடியும்
உன்னால் முடியும்.. உன்னால் முடியும்..
உன்னால் முடியும்…என்று உன் ஆழ்மனதின் செவிகள் நிறையும் வரை இதை நீ உச்சரித்துஇரு..
உன்னால் முடியாத செயல்களே இந்த உலகில் இல்லை. ஆம் ! நீ நம்ப மறுத்தாலும் அதுவே உண்மை உன்னால் முடியும்.
யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு உயிரினத்திர்க்கும் ஒரு கட்டமைப்பு இருக்கும். ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கும். ஆனால் மனிதன் மட்டும் அதில் விதி விளக்கானவன்.
ஒருவன் கூர்முனை கத்தியின் மேல் குதித்து சாகசம் செய்வார். ஒருவர் கண்ணாடியையும் கடித்து விலுங்குவார்.
ஒருவர் கடலையே நீந்தி செல்லுவார்.இரும்பையும் உடைப்பவர். இமையத்தையும் தொடுபவர் என்று நாம் எண்ணி பார்க்க முடியாத அளவு அற்புதங்களை நிகழ்த்துபர்கள் நம் கண்முன்னே இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் விதி விலக்கானவர்கள் நாம் அப்படி இல்லையே சராசரி மனிதன் தானே என்று எண்ணுகிறீர்களா அந்த எண்ணத்தை உங்கள் அடி ஆழ்மனதில் இருந்து இப்போதே தூக்கி எறிந்து விடுங்கள்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு
மனிதனும் ஒரு அற்புதமானவர்கள் தான்
நிங்களும் ஒரு அற்புதமானவர் தான் உங்களால் முடியாத காரியம் ஒன்று என்பது இல்லை. அதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும் . அவ்வளவுதான்.
எந்த ஒரு இலக்கிற்கும் வெற்றிக்குமான
பாதை ஒன்றுதான். அந்த இலக்கை உன் வெற்றியை நீ முதலில் முடிவு செய்து கொண்டு அதை நோக்கி நகர துவங்க வேண்டும். அந்த வெற்றி இலக்கு என்பது சிறு குன்றாக இருக்கலாம் பெரும் மேடாக இருக்கலாம். மிகப்பெரிய சிகரமாக இருக்கலாம். ஆயிரம் தடைகள் வரலாம் நீ அடிமேல் அடியெடுத்து வைத்து அத்தனையும் தாண்டி முன்னேறிக்
கொண்டே இருந்தால் மட்டுமே போதும் .
வெற்றி தானாய் ஒருநாள் வந்தே தீரும்.
அதை அடைய உன்னால் முடியும்.
ஆனால் அந்த பாதை அவ்வளவு சுலபம் ஆனதல்ல என்பது அனைவருக்கும் புரிகிற ஒன்று தான். நம்மை நாமே கட்டமைத்து கொள்ள வேண்டும். அதற்கான வழி முறைகளை மேன் படுத்திக் கொள்ள வேண்டும். நாம்
வெற்றியை இலக்கை அடைய தகுதியானவர்களாய் நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழி முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
“அட நம்மால் எல்லாம் முடியாதுங்க” என்று நீயே உனக்குள் கூறிக்கொண்டு உனக்குள் எரியத் துவங்குகிற சிறிய ஒளியையும் அனைத்து விட்டு ஒரு சராசரியான வாழ்க்கைக்குள் முடங்கிவிடாதே..
என்னால் முடியும் என்று நம்பிக்கையோடு
உனக்குள் இருக்கும் அற்புத ஒளியை நோக்கி நகர்ந்து அதர்க்கு தேவையானவற்றை கற்று தேர்ந்து உன்னதமான ஒரு பிரகாசத்தை நீ அடைந்து அதை மற்றவருக்கும் கொடுக்க உன்னால் முடியும்.
