தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது கல்லணை. திருச்சிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கல்லணையை கட்டியவர் கரிகால சோழ மன்னன் கட்டினார்.
கரிகாலன் என்பதற்கு கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
தற்காலத்தில் காவிரியில் அடிக்கடி பெருவெள்ள வரும். ஆனால், அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்கு சென்று விடும்.
மழை காலங்களில் வெள்ளப்பெருக்காலும் கோடை காலத்தில் நீரின்றி மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனை தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகாலன்.
எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு காலகட்டத்தில் இந்த கல்லணை கட்டப்பட்டது.
அணை கட்டப்பட்ட முறையை சொல்ல வேண்டுமென்றால் காவிரி ஆற்றின் மிகப்பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர்.
அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணை பூசி இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்படி செய்தனர்.
இது பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் உறுதியோடு நிற்கிறது. கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனைப் பறை சாற்றுவதாக உள்ளது.
இந்த கல்லணை இதுவே உலகின் மிகப் பழமையான நீர் பாசன திட்டம். எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கட்டியுள்ளார்கள்.
பழந்தமிழரின் கட்டுமான திறனுக்கு சான்றாகும். இது இன்றுவரை வியத்தது சாதனையாக உள்ளது இந்த சாதனையை செய்தவர் நமது நாட்டில் தமிழ்நாட்டு மன்னன் கரிகாலச் சோழன்.
கல்லணை இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
காவிரி ஆறானது .காவேரி, கொள்ளிடம் ,பெண்ணாறு, புது ஆறு என நான்காக பிரிகிறது.
காவிரி ஆறு பிரியும் இடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. இதனால் தான் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் வளமாக இருக்கின்றது. உழவு பாசனத்திற்கு மிகவும் பயன்படுகிறது.
உழவு பாசனத்திற்கு மிகவும் பெரிய திட்டமாகும். இந்தக் கல்லணை கட்டிய கரிகால சோழன், கல்லணை உள்ளவரை கரிகாலனின் புகழும் நிலைத்திருக்கும்.