ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும் போது நல்ல குழந்தைகள் தான். எந்த இடத்தில் யாரிடம் குழந்தை பிறக்கிறார்களோ ?அவர்கள் வளர்ப்பை பொறுத்தே! வளர்கிறார்கள்.
ஒரு சிலரிடம் களிமண்ணைக் கொடுத்து, ஏதாவது செய்யுங்கள் என்றால் அவரவர் எண்ணப்படி ஒருவர் பொம்மை செய்திருப்பார், ஒருவர் விநாயகர் செய்திருப்பார், ஒருவர் கட்டவண்டி செய்திருப்பார், ஒருவர் விளையாட்டு சாமான் செய்திருப்பார் இப்படி அவரவர் எண்ணப்படி அந்த களிமண் உருவம் ஆகி இருக்கும் .
அது போல் தான் குழந்தையும் வசதியான வீட்டில் பிறந்த குழந்தை ஆடம்பரமான பொருளை அனுபவித்து வளரும்.
வசதி இல்லாமல் ஏழ்மையில் பிறந்த குழந்தை அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வளரும். நடுத்தர வீட்டில் பிறந்த குழந்தை அவர்கள் வளர்க்கும் விதத்தில் வளரும் இதில் ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
ஒரு வீட்டில் அக்குழந்தையின் பெற்றோர் எப்படி இருக்கிறார்களோ!அவர்களைப் பார்த்து வளரும் குழந்தை பெற்றோர்களைப் போன்றே வளர்வார்கள். ஒரு சில குழந்தைகள் மட்டுமே வேறுபட்டு வளர்வார்கள்.
மற்றவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு வளர்வார்கள்.
தன் முயற்சி :-பெற்றோர் முயற்சி ,பிறர் முயற்சி என மூன்று வகையில் பிரித்துக் கொள்ளலாம் தன் முயற்சி “கற்பூரம்” நெருப்பு பட்டவுடன் எரிவது போல் இவர்கள் எதையும் சொல்லிக் கொடுத்த உடனே கற்றுக்கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்வார்கள் .
பெற்றோர் முயற்சி:- இவர்கள் இரண்டாவது வகை படிப்பார்கள் நல்ல குணம் இருக்கும் செய்ய சோம்பல் கொள்பவர்கள். இவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். “கரித்துண்டு” போன்றவர்கள் நெருப்பு இருந்தால் புகை வரும். இல்லை என்றால் வராது ஊதினால்தான் புகை வரும். அது போன்றவர்கள் இரண்டாம் வகை குழந்தைகள்.
பிறர் முயற்சி:- வாழை மட்டை எரிய வைப்பது மிகவும் கடினம் அதுபோன்ற குழந்தைகள் மூன்றாம் ராகம். இவர்களுக்கு தன் புத்தியும் இருக்காது, சொல் புத்தியும் இருக்காது. இவர்களை சரியாக கொண்டு வர சிரமப்பட்டு அடுத்தவர்களை அணுகி ஆலோசனை பெற்று சிரமப்பட்டு வளர்க்க வேண்டும்.
எனவே ,குழந்தை வளர்ப்பு என்பது சிரமமான ஒன்றுதான் வளர்ப்பை ஒரு கலையாக எண்ணி வளர்க்கும் போது சிலையாக செதுக்குவதும் ,பொம்மையாக செய்வதும் அவரவர் கையில் தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பை கலையாக எடுத்துக்கொண்டு பொறுமையாக வளர்த்தால் அவர்கள் சிறந்தவர்களாக வளர்ந்து சிகரம் தொடுவார்கள்.