பெண் உரிமை கிடைக்காத காலகட்டத்தில் விழிப்புணர்வு தரும் எழுச்சி மிகு கவிதைகளால் பெண் விடுதலை வேண்டி ”குடும்பவிளக்கு” எழுதிய பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் ஒரே மகன் கோபதி என்கிற மன்னன் மன்னர்.,அவர்களின் குடும்பத் தலைவி சாவித்திரி அம்மாள்.
கோ.செல்வம், கோ.தென்னவன், கோ. பாரதி ஆகிய மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.
முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் ஐயா புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். மொழிப்போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.குயில் இதழ்ப்பணி செய்தார். பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை , புதுவை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். புதுவைக்கு சொந்தமாக தமிழ்ச் சங்கக்கட்டிடம் கட்டி மகிழ்ந்தவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பேற்று செம்மையாக செய்துமுடித்தவர்..


தனது மனைவி சாவித்திரி அம்மா மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் கவிமன்றம் நடத்தி தமிழ்ப்பணி செய்தவர். புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாவேந்தர் பாரதி தாசன் எழுதிய
”வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என்தமிழ்த் தாயே ” – என்ற பாடலை பாட வைத்தவர்.

புதுச்சேரியை…பாண்டிச்சேரி என்ற மாற்றத்தை எதிர்த்து கவிமன்றம் நடத்தி ”புதுச்சேரி”என்று மாற்றி அமைத்தவர் .
பாவேந்தர் பற்றாளர்களை பாராட்டி விருது கொடுத்தவர் .அண்ணா நூற்றாண்டை சிறப்பாக நடத்தி கவியரங்கம் நடத்தி விருது கொடுத்தவர்.தமிழ் மீதும் தமிழ் சார்ந்த கவிமக்கள் மேலும் அன்பும், நேசமும் கொண்டவர்.
பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதி வெளியிட்டவர். தம் வாழ்நாள் முழுவதும் பாவேந்தர் பற்றிய 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி சிறப்பித்தவர். பாவேந்தர் போன்ற தோற்றமும், கம்பீரமும் கண்முன்னே இருக்கும் காட்சியே அவர் ஜுன் 6-7-2020 அன்று மறைந்தார்.ஐயா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திகிறோம் . தமிழ் உள்ளவரை மன்னன் மன்னர் ஐயா வாழ்ந்து கொண்டே இருப்பார் மனங்களில் ..
ஐயா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர், கவிஞர், அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ் அன்னையே ஆறுதல் சொல்வாள்., என்றும் ஐயாவின் ஆசியுடன் தமிழ்ப்பணி செய்யும்
மகளாய் புதுவையில் வாழ்ந்த, பாக்கியம் பெற்ற
செந்தமிழ்வாணி ச. மல்லிகா

Share.

Leave A Reply