18-குழந்தையின் உற்சாகம்:-
குழந்தைகளின் கைகளில் பென்சில், பேனா, சாக்பீஸ் கிடைத்தால் போதும் உடனே சுவர், கதவு, தரை என கோடு போட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த சமயத்தில் சிலேட் அல்லது நோட்டில் நீ அழகாக எழுதுகிறாய் கோடு போட்டு வரைகிறாய் இதில் வரைந்து காண்பி எனச் சொல்லிப் பாருங்கள்.
நோட்டு முழுக்க சிலேட் முழுக்க முட்டையும் கோடும் கிறுக்கல்களாக இருக்கும். அதை வாங்கிப் பார்க்கும் பெற்றோர் சத்தம் போடாமல்…
குட்டி பெண் பூ மாதிரி வரைந்து விட்டாளே, நீ வரைந்த பூவை நான் தலையில் சூடிக் கொள்கிறேன். எத்தனை கோடு போட்டிருக்கிறாய் என்று எண்ணலாம் என்று எப்படி சொல்லி பாருங்கள் குழந்தையின் முகத்தில் நூறு வாட்ஸ் பல்பு பிரகாசிக்கும்.
இப்படி அவர்களின் கரங்களில் பேனா, பென்சில் கொடுத்து எழுதும் பழக்கத்தையும், வரையும் பழக்கத்தையும் ஏற்படுத்தலாம். பொருள்களை காட்டி இது என்ன? இதன் பெயர் என்ன? என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்துக் கொண்டே வேலையும் செய்யலாம்.
பெயர்களை கூறுவதுடன் ஞாபக சக்தியும் கூடும். நான் சொல்லிவிட்டோன் என்று குழந்தையும் சந்தோசப்படுவார்கள்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் பூங்கா,மிருககட்சி சாலை, மியூசியம், கோயில் இப்படி அழைத்துப் போகும் போது புத்துணர்வம். புதிது… புதிதாக தெரிந்து கொள்ள முடியும். பாடநூல்கள் மட்டும்
படித்தால் போதும் என்று நினைக்காமல் சிறு… சிறு நூல்களாக வாங்கி கொடுத்து பிறநூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நூலகங்களுக்குச் சென்று படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
பிறருக்கு கொடுத்து உதவும் பழக்கத்தையும், அறம் செய்யும் பழக்கத்தையும் பிஞ்சிலேயே விதைத்து விட வேண்டும். அப்போதுதான் பிறருக்கு ஏற்படும் துன்பம் கண்டு உதவ முன்வருவார்கள்.
அவர்கள் இயல்பு கண்டு தட்டிக் கொடுத்தால் போதும் உற்சாகத்தில் ஊற்றாக வெளிவருவார்கள்.
உழைப்பு என்பது உயர வைக்கும் ஏணி அதை உதாசீனப்படுத்தாமல் சிறுசிறு வேலை செய்ய பழக்க வேண்டும்.
சின்ன வயதில் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் சந்தோசம் பெரியது. காலில் இருந்து தலைவரை எவ்வளவு வளர்ந்து விட்டேன். என்னால் செய்ய முடியும் என குழந்தைகள் நினைக்கும் பட்சத்தில் தன்னம்பிக்கையும் கூடவே வளர்கிறது. மகிழ்ச்சி உற்சாகமும் பிறக்கிறது.
பசியும் தானாகவே வந்துவிடும். பின் என்ன உடலுக்கு பயிற்சி உள்ளத்திற்கு மகிழ்ச்சி, ஊக்கத்திற்கு நம்பிக்கை எல்லாம் கலந்தால் ஆரோக்கியமான குழந்தை நம் வீட்டில் உற்சாகமாக வளரும்.