4-மனதை பக்குவப் படுத்துவது
உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனம் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியம்.
வீணாக கவலைப்பட்டுக் கொண்டு எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது, புலம்பிக்கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். எனவே,
துன்பங்களை கண்டு துவண்டு விடாமல். தைரியமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தால். குழந்தையும் நல்ல மனநிலையில் தான் பிறக்கும் இதில் ஐயமில்லை.
பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரிடம் நாராயணனின் கதையை கேட்டதால் குழந்தை பிரகலாதன் நாராயணின் பக்தன் ஆனான்.
இதிலிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது, என்பது தெரிகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்தல், நல்ல இசைகளைக் கேட்டல், நல்ல புத்தகங்களைப் படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில் இருக்கும் போதே கருவிலே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.
நமது மனநிலையின் பிரதி பிம்பம் தான் குழந்தை. அந்த குழந்தையை நல்ல குழந்தையாகப் பெற்றெடுக்க பாடல்களை பாடலாம்.
அவ்வாறு பாடும் போது நமது மனம் எல்லா பிரச்சனைகளையும் மறந்து பாடலில் “லயித்து” மனம் லேசாகிவிடும். சுவாசமும் நல்ல முறையில் இருக்கும்.
இதற்கு பாடகியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தன்னால் என்ன பாட முடியுமோ ?அதை கூச்சமில்லாமல் பாடினால் போதும்.
கடவுள் முன் அமர்ந்து வணங்கி இறை பாடல்கள் மந்திரங்கள் சொல்லும் போது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
– தொடர் வளரும்.