மகளிர் சிறப்பு கட்டுரை
மகப்பேரின் மகத்துவம்
5-நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி
விலங்குகள் பறவைகள் கூடி வாழ காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை.
நல்ல நாள், நல்ல நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள்.
இது எல்லாம் எதற்கு? என நாம் நினைக்கலாம். நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால், நல்ல நேரத்தில்… நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும்.
இந்த காரணத்தால் பெரியோர்களே! இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள்.
ஒரு பெண் கர்ப்பமடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
முதல் இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய் அப்போது குழந்தை தடித்து மாமிசம் பெற்று திகழும்.
மூன்றாம் மாதத்தில் அதிபதி குரு இம்மாதத்தில் கை, கால், சிசு தோன்றும்.
நான்காம் மாதத்தின் அதிபதி சூரியன் இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும்.
ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த மாதத்தில் மாமிச பாகத்தை வலுவடைய தக்க தோல் உண்டாகும்.
ஆறாம் மாதத்தின் அதிபதி சனி இம்மாதத்தில் தோல் மீது உரோமங்கள் வளர ஆரம்பிக்கும்.
ஏழாம் மாதத்தின் அதிபதி புதன் இம்மாதத்தில் மெய், வாய், செவி, கண், மூக்கு போன்ற ஞானியின் உண்டாகும்.
எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவை கொடி வழியாக உண்டு திருப்தி அடையும். இம்மாதத்தின் அதிபதி குழந்தை கர்ப்பம் தரிக்கும்போது எந்த லக்னாதிபதி எதுவோ அந்த கிரக அதிபதி.
ஒன்பதாம் மாதத்தின் அதிபதி சந்திரன் இந்த காலகட்டத்தில் குழந்தை முழு உருவம் பெற்று வெளி உலகத்தை நோக்கி இருக்கும்.
பத்தாவது மாதத்தின் அதிபதி சூரியன் இம்மாதத்தில் குழந்தை பிரசவிக்கும். ஆகையினால் கர்ப்பிணிகள் அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்களை வணங்கினால் தாய், சேய் இருவருக்கும் நலம் உண்டாகும்.