8-எளிய முறையில் பிரசவ வழிமுறைகள்
கற்பிணிப் பெண்கள் உணவு உட்கொள்ளும் போது பிற தின்பண்டங்கள் உண்ணும் போதும் யாரும் வந்தால் பகிர்ந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது மனது சந்தோசப்படுகிறது.
குழந்தையும் அதே மனநிலையில் வளர்ச்சி அடையும். சில பெண்கள் இயல்பாகவே பிறருக்கு கொடுக்காமல் மறைத்து உண்பார்கள்.
அவ்வாறு உட் கொள்ளும் போது மனம் யாரும் வந்து விடுவார்கள். என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
குழந்தையின் மனநிலையும் அதேபோன்றுதான் வளர்ச்சி அடையும். மன இறுக்கம் உடல் முழுவதும் இறுக்கத்தைக் கொடுக்கும்.
உற்சாகத்தை கொடுக்காது. எனவே, பகிர்ந்து உண்டு சாப்பிடுவது நலம் பயக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு மணி கணக்கில் சோம்பலுடன் அப்படியே அமர்ந்து கொண்டு இருப்பவர்களும் உண்டு.
“அவ்வாறு இருப்பவர்களை பெரியவர்கள் வாயில் படியில் உட்காராத” எனச் சொல்வது உண்டு.
‘இவர்களுக்கு என்ன வேலை?’ அங்கே உட்காராதே, இங்கே உட்காராதே ,எனக் கூறுவதே! வேலை என அவர்கள் சொல் கேட்பதில்லை.
“ அவ்வாறு நாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதால் குழந்தை அசைவதில் சிரமம் ஏற்படும்” ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பதால் உஷ்ணம் அதிகரித்து “ஆசன”வாயை இறுக்கம் அடையச் செய்யும். அவ்வாறு இறுக்கம் அடைந்தால் குழந்தை பிறக்க கடினமாகும்.
வேலைக்குச் செல்லும் பெண்களும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய நேரும்.
முடிந்தவரை ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வது கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நலம் பயக்கும். எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ? அவ்வளவு தூரம் நடந்து வருவது நல்லது.
நல்ல மனநிலையில் இருப்பது. மனதை உற்சாகமான நிலையில் வைத்திருந்தால் குழந்தை பிறப்பது எளிதாகும்.
ஐந்து மாதத்தில் இருந்து இரவு படுக்கச் செல்வதற்கு முன் சுடுதண்ணீர் வெதுவெதுப்பாக இடுப்பில் இருந்து கால்வரை ஊற்றி வர விரைவில் நல்ல தூக்கம் வரும்.
கை, கால் வலி, வீக்கம் போன்றவை வராமல் நிம்மதியாக இருக்கலாம்.
கணவனுடன் சேர்ந்திருப்பது, குழந்தை பிறக்கும் வரை நீங்கள் வேலை செய்வது பிரசவத்திற்கு எளிதாகும்.
குழந்தை பிறந்த பின்பு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்த வீட்டில் உடலை அலட்டிக் கொண்டால் உடல் கெட்டுப் போகும்.
சீரணக் கோளாறு, உடல் வலி, காய்ச்சல், சளி பிடித்தல் போன்றவை வர காரணமாகும்.
குழந்தை பிறந்த வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதால் அதிகம் சாப்பிட்டு குண்டாகிவிட்டால் அழகு போய்விடும். குழந்தை பிறந்த பின் என் அழகே போய்விட்டது என வருத்தப்படுவதை காட்டிலும், அளவுடன் உணவு உண்டு உடலை கட்டாக வைத்திருந்தால் குழந்தை பிறந்த உடன் அழகாக இருப்பீர்கள்.