• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
Home»கட்டுரைகள்»மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேரின் மகத்துவம்
கட்டுரைகள்

மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேரின் மகத்துவம்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாஜூன் 10, 2024கருத்துகள் இல்லை4 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேரின் மகத்துவம்

10-ஜனனத் தொழிற்சாலை

ஆண் பெண் உடலுறவு உச்சகட்டத்தில் ஆண் வெளியேற்றும் விந்து தன் ஜன தொழிற்சாலையின் வேலையை துவங்கி வைக்கிறது. பெண் சினை முட்டையோடு ‘பெணில்’ எனப்படும் ஆணுறுப்பு கர்ப்பப்பை வரைச் சென்று பத்திரமாக விந்தை இறக்கி வருவதற்கு வழி செய்து கொடுக்கும் வகையில் தான்…

விரிந்து கொடுக்கும் சதைப் பகுதிகளுடன் கூடிய வஜினா என்ற பெண்ணுறுப்பு பெண்களுக்கு அமைந்துள்ளது. இப்படி ஜனனம் உருவாக எந்த தடையில் இருக்கக் கூடாது என்பதற்காக இயற்கையே எப்படி எல்லாம் ஆண், பெண் உடல் அமைப்பை படைத்திருக்கிறது.

பெண்ணின் வயிற்றுப் பகுதியில் உள்ள கர்ப்பப்பையில் தான் குழந்தை முழு வடிவம் பெறுகிறது. கர்ப்பப்பையில் உள்ள கரு வளர… வளர கர்ப்பப்பையில் கிளை பைகளில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ரான் ஹார்மோன்கள் தான் ஒரு பெண்ணிடம் மென்மையை காட்டும். வயிறு பெரிதாவது, மார்பக வளர்ச்சி இவற்றை உருவாக்குகிறது.

சில பெண்கள் கர்ப்பம் தரிப்பது போல் இருப்பார்கள் வயிறு புரட்டிக் கொண்டு இருக்கும். கருப்பையில் கரு ஒரே ஒரு பந்துபால் உருண்டு திரண்டு இருக்காமல் குட்டிக் குட்டி பந்துதலாக மாறி ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு திராட்சை போல் கருப்பை முழுக்க நிறைந்திருக்கும்.

இப்படி இருப்பதற்கு முத்துப்பிள்ளை கர்ப்பம் என்பார்கள். வயிறு புரட்டிக் கொண்டே இருந்தால். வீட்டிலிருந்து விடாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து. இதை சுத்தம் செய்து விடுவார்கள். சில பெண்களுக்கு வாந்தி எதுவும் வராது எப்போதும் இருப்பது போல் இருப்பார்கள். இவர்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டுள்ளதா? என்பதை அவர்களுக்கு தெரியாமல் எப்போதும் போல் சாதாரணமாக இருப்பார்கள்.

இயல்பாக இருப்பதால் மருத்துவரை அணுகாமல் இருந்துவிடக் கூடாது. நமக்கு எவ்வளவு பணி இருந்தாலும்… மருத்துவர் ஆலோசனைகளும் அதன்படி நடப்பதும் மிக அவசியம்.

கற்பமடைந்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தான் அதிக பட்சம் வாந்தி, மசக்கை வரும் பிறகு சாதாரணமான மனநிலையில் இருப்பது தாய், சேய் இருவருக்கும் நலம் பயக்கும்.

பொதுவாக மருத்துவ உலகத்தில் குழந்தை கருத்தரித்த மாதங்களை மூன்று… மூன்று மாதங்களாகப் பிரித்து பார்க்கிறார்கள்.

முதல் மூன்று மாதங்கள் வரை “முதல் டிரைமிஸ்டர்” என்றும். நான்காவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை “இரண்டாவது ட்ரைமெஸ்டர்” என்றும். ஏழாம் மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் காலம் வரை “மூன்றாவது டிரைமெஸ்டர்” என்றும் பிரித்து பார்த்து வளர்ச்சியை கணக்கிடுகிறார்கள்.

தாய்க்கும் சேயிக்கும் போட வேண்டிய தடுப்பு ஊசிகள். கருவுற்ற பெண்கள் கருவுற்றதை மருத்துவரிடம் காண்பித்து உறுதி செய்து கொண்ட பின் ஒவ்வொரு மாதமும் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.

கருவூற்ற துவக்க காலத்தில் ரணஜன்னி தடுப்பு ஊசி முதல் தலைவணையும். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இரண்டாவது ரணஜன்னி தடுப்பு ஊசி போட வேண்டும்.

குழந்தை பிறந்த 1 1/2 மாதம் ஆகியதுமே பி.ஸி. ஜி ஊசியும்.  டி. பி . டி முதல் ஊசியும் போலியோ சொட்டு மருந்தின் முதல் டோசும் கொடுத்து விடுவது நல்லது.

அதன் பின் ஒரு மாதம் கழித்து 2 1/2 மாதமாக உள்ள போது இரண்டாவது டி.பி.டி ஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்தின் இரண்டாவது டோசும் கொடுக்க வேண்டும்.

3 1/2 மாதமாக உள்ள போது மூன்றாவது ஊசியும்,  மூன்றாவது டோசும் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு ஒன்பது மாதம் ஆகும்போது தட்டம்மை நோய் தடுப்பு ஊசி போடப்பட வேண்டும்.
டி. பி. டி ஊசி போட்டதற்கு பிறகு  கொப்பளம் ஏற்படக்கூடாது. அருகில் உள்ள சுகாதார ஊழியிரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

குழந்தைக்கு காய்ச்சல், பேதி, பலவீனம் இருந்தால் கூட தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அளவுக்கு குழந்தைக்கு நோய் ஏற்பட்டு இருந்தால் தடுப்பு ஊசி போடக்கூடாது.

பிரசவத்திற்குப் பின் கடைபிடிக்க வேண்டியவை பிரசவம் முடிந்த உடன் ஒரு நாள் உடல் அழகு அலுங்காமல், பிரளாமல் நேராக மல்லாந்த நிலையில் படுத்திருக்க வேண்டும்.

பிரசவத்திற்கு பிறகு தாயின் உடல் நிலைகள் சீரண சக்தி மிகவும் குறைவாக இருக்கும் கெட்டியான உணவுகளை சாப்பிடக்கூடாது.

திரவ நிலையில் உள்ள பால், பழச்சாறு போன்றவைகளே  சிறந்தது. மறுநாள் ரசம், பூண்டுக்  குழம்பு  போன்ற ஜீரணம் ஆகக் கூடியவைகளை சாதத்தில் போட்டு  காய்களுடன் சாப்பிடலாம்.

அளவாக சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடக்கூடாது. பழச்சாறு போன்ற திரவ உணவில் சேர்ப்பது நல்லது. பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு அதிகப்படியான இரத்தப்போக்கு இருக்கும். சில பெண்களுக்கு பத்து நாட்கள் வரையும் கூட  ரத்தப்போக்கு இருக்கும் பயப்பட தேவையில்லை. உடல் சோர்வடையும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

பிரசவத்திற்கு பின் தாயின் வயிறு நாளுக்கு நாள் குறைந்து வரவேண்டும் கருப்பை சுருங்கி இயல்பு நிலைக்கு வருவதன் அடையாளமாகும். தாய் நன்றாக தூங்கினால் தான் தாயின் உடல் நன்றாக உள்ளது என்று அர்த்தம். நன்றாக தூங்கத்… தூங்கத்தான் உடல் வலி குறைந்து உடல் இயல்பு நிலைக்குத்  திரும்பும்.

குழந்தையின் எடை

குழந்தை பிறக்கும் போது எத்தனை கிலோ எடை இருக்க வேண்டும். வளர..
வளர எத்தனை கிலோ இருக்க வேண்டும். என்பதே நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

நாம் சரியாக குழந்தையை வளர்க்கிறோமா? என்ற சுய பரிசோதனையே இது. குழந்தை பிறக்கும் போது 3 கிலோ முதல் 3 1/2 கிலோ  வரை இருக்க வேண்டும்.

முதல் வாரம் குழந்தையின் எடை கூடுவது இல்லை. பின் மாதம் தோறும் சுமார் 150 கிராம் எடை கூட வேண்டும். ஆறு மாதத்திற்கு பின் ஒரு வயது வரை 75 கிராம் எடை கூட வேண்டும். ஒரு வயது முதல் ஐந்து வயது வரை 5 கிலோ எடை கூட வேண்டும். இதில் கூட, குறைய இருக்கும் இதற்காக கவலைப்பட தேவையில்லை.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை.அக்கலையைத் தெரிந்து கொண்டால் குழந்தை வளர்ப்பு மிக எளிதே.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

உடைந்த கப்பல்

ஏப்ரல் 27, 2025

உடைந்த கப்பல்

ஏப்ரல் 20, 2025

உடைந்த கப்பல்

ஏப்ரல் 13, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

ஹைக்கூ கவிதைகள் ஆலமரம்

ஜூன் 16, 2025

கவிஞர் மு. வாசுகி

ஜனவரி 1, 2020

கவிஞர் சுந்தர பழனியப்பன்

ஜனவரி 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

ஜனவரி 3, 2020
Latest Reviews
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Facebook Twitter Instagram Pinterest
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
© 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

Type above and press Enter to search. Press Esc to cancel.