ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றை பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றை பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறியது வாமே”
என்று கூறுகிறார் திருமூலர்.
அதாவது பத்மாசனத்தில் அமர்ந்து. வலது கை மோதிர விரலால் இடது மூக்கை அடைத்து .வலது மூக்கால் காற்றே உள்ளே இழுத்து அடக்கி காட்டை விரலால் வலது மூக்கை அடைத்து பின் மறு மூக்கின் வழியாக வெளியே விட்டு.
நாடி சுத்தி போன்ற யோக பயிற்சிகளை செய்பவர்கள் யாராயினும் வயதானாலும் சுறுசுறுப்புடன் காட்சியளிப்பார்கள். அவர்களை கூற்றுவன் நெருங்க மாட்டான் என்று கூறுகிறார் திருமூலர்.
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை இரவு பகல் தொடர்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். தன்னிச்சையாக வந்து போய்க் கொண்டிருக்கும் மூச்சை கட்டுப்படுத்தினால். அதிக நாள் உயிர் வாழலாம்.
மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துதல் சுவாசப் பயிற்சி எனப்படுகிறது. ஒரு நாளைக்கு நம் உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளும் சுத்தமடைகின்றன.
சுவாசத்தை உள்ளிழுப்பதுபூரகம் 16 வினாடி, சுவாசத்தை உள்ளடக்குவது கும்பகம் 64 வினாடி, சுவாசத்தை வெளிவிடுவது ரேசகம் 32 வினாடி .
இவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்துதல் மூலம் யானை பலம் பெறலாம். சுவாசத்திற்கும் மனதிற்கும் நேரடியான தொடர்பு உண்டு.
நாம் சாதாரணமாக ஒரு நிமிடத்தில் 15 தடவை மூச்சு விடுகிறோம். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 15× 60 =900 முறை ஒரு நாளைக்கு 24×900= 21,600 முறை ,இந்த எண்ணிக்கையை குறைத்தால் ஆயில் கூடும்.
ஆமை ஒரு நிமிடத்தில் சுமார் 4 முறை மட்டுமே மூச்சு விடுவதால் சுமார் 300 ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. பாம்பு ஒரு நிமிடத்தில் ஒருமுறை மட்டுமே மெதுவாக மூச்சு விடுவதால் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்கிறது
அது போல சித்தர்களும் மூச்சுக்காற்றை அடக்கி பிராணனை சேமித்து அதிக நாள் வாழ்ந்தார்கள். யோகிகள் சித்தர்கள் பல ஆண்டுகள் கூட உணவில்லாமல் பிராண சக்தியால் மட்டுமே உயர் வாழ்ந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் இருந்து நம் நாட்டில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 10,000 அதிகமான கிலோமீட்டர் தூரத்தில் 21 நாட்களில் இரவு ,பகல் ஓய்வில்லாமல் உணவு உண்ணாமல் பிராண வாயுவை மட்டுமே பயன்படுத்தி பறந்து வந்த டைகின்றன.
இதை எளிய முறையில் தான் சித்தர்கள் பிராணக் காற்றை மட்டுமே சுவாசித்து அதிக நாள் வாழ்ந்து இந்த பூமிக்கு நல் போதனைகள் தந்து மேன்மை அடையச் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் வழியில் நாம் நடக்கும்போது நமக்கும் மனோ பலமும், சக்தியும் மேன்மை அடையும்.